என் மலர்
புதுச்சேரி

கோப்பு படம்
தனியாக நடந்து சென்ற பெண்ணிடம் கைபை பறிப்பு

- பைக்கில் வந்த வாலிபர் திடீரென சிந்தியா வைத்திருந்த கைபையை பறித்து கொண்டு மின்னல் வேகத்தில் தப்பி சென்று விட்டார்.
- போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
புதுச்சேரி:
புதுவை தென்னஞ்சாலை ரோடு சஞ்சய்காந்தி நகரை அடுத்த டாக்டர் காலனியை சேர்ந்தவர் பீட்டர். இவரது மனைவி சிந்தியா(வயது70). இவர்களுக்கு ஒரு மகன் மற்றும் ஒரு மகள் உள்ளனர். இவர்கள் இவரும் துபாயில் வசித்து வருகின்றனர்.
கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு பீட்டர் இறந்து விட்டார். இதனால் சிந்தியா தனியாக வசித்து வருகிறார்.
இந்த நிலையில் சிந்தியா புதுவை-கடலூர் சாலையில் உள்ள தேவாலயத்துக்கு நடந்து வந்து கொண்டிருந்தார். தென்னஞ்சாலை ரோட்டில் உள்ள ஏ.ஜி.சபை அருகே வந்த போது பின்னால் பைக்கில் வந்த வாலிபர் திடீரென சிந்தியா வைத்திருந்த கைபையை பறித்து கொண்டு மின்னல் வேகத்தில் தப்பி சென்று விட்டார். சிந்தியா அந்த கைபையில் ரூ.ஆயிரம் ரொக்கப்பணம் ரூ.10 ஆயிரம் மதிப்புள்ள செல்போன் மற்றும் வீட்டு சாவியை வைத்திருந்தார்.
இதுகுறித்து சிந்தியா உருளையன்பேட்டை போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
மேலும் அப்பகுதியில் உள்ள சி.சி.டி.வி. கேமராக்களை ஆய்வு செய்தனர். அப்போது 17 வயது சிறுவன் கைபையை பறித்து சென்றது பதிவாகியிருந்தது.
இதனை வைத்து அந்த சிறுவனை போலீசார் பிடித்தனர்.
அவனிடம் இருந்து கைபை மற்றும் பைக்கை பறிமுதல் செய்தனர். பின்னர் கோர்ட்டில் ஆஜர் படுத்தி சிறுவர் சீர்திருத்த பள்ளியில் அடைத்தனர்.