என் மலர்
புதுச்சேரி

அனிபால் கென்னடி எம்.எல்.ஏ. மயானக்கொள்ளை விழா பிரச்சினைக்கு பேச்சுவார்த்தை நடத்திய காட்சி.
மயானக்கொள்ளை விழா பிரச்சினைக்கு தீர்வு-அனிபால் கென்னடி எம்.எல்.ஏ. நடவடிக்கை

- புதுவை உப்பளம் தொகுதிக்குட்பட்ட வம்பாகீரப் பாளையம் சன்னியாசி தோப்பு மயான கொள்ளை நடைபெறும் இடத்தை தற்போது பேச்சி யம்மன் உருவ பொம்மை அமைக்கும் பணி நடந்தது.
- பொதுமக்கள் போராட்டம் நடத்த முடிவு செய்தனர்.
புதுச்சேரி:
புதுவை உப்பளம் தொகுதிக்குட்பட்ட வம்பாகீரப் பாளையம் சன்னியாசி தோப்பு மயான கொள்ளை நடைபெறும் இடத்தை தற்போது பேச்சி யம்மன் உருவ பொம்மை அமைக்கும் பணி நடந்தது.
இதனை தனியார் ஒருவர் என்னுடைய இடம் என்று கூறி கோவில் பணிகளை தடுத்து நிறுத்தினார். இதனால் பொதுமக்கள் போராட்டம் நடத்த முடிவு செய்தனர்.
இதுகுறித்து அனிபால் கென்னடி எம்.எல்.ஏ. பேச்சுவார்த்தை நடத்தினார். இடத்திற்கு உரிமை கொண்டாடுபவரிடம் ஊர்மக்களின் தெய்வவழி பாட்டில் எந்த தடையும் பிரச்சினையும் வரக்கூடாது என்றும் கோவிலுக்கே அந்த இடத்தை தந்து விடுமாறும் முதல்-அமைச்சரிடம் இந்த பிரச்சினையை கூறி தங்களுக்கு இடத்திற்கு உண்டான தொகையினை பெற்றுத்தருவதாக உறுதியளித்தார்.
அவரின் கோரிக்கையை ஏற்று இடத்தின் உரிமையா ளர் சம்மதம் தெரிவித்தார். இதனால் அப்பகுதி பொதுமக்களின் மகிழ்ச்சி அடைந்தனர்.
அனிபால் கென்னடி எம்.எல்.ஏ.வுக்கு நன்றியைத் தெரிவித்தனர். இந்த பேச்சுவார்த்தையின் போது வக்கீல் பரிமளம் உடனிருந்தார்.