என் மலர்
புதுச்சேரி
X
ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்ட நேரு எம்.எல்.ஏ.வுக்கு தொடர் சிகிச்சை
Byமாலை மலர்25 Aug 2023 2:00 PM IST
- டாக்டர்கள் அறிவுறுத்தலின்படி வீட்டுக்கு திரும்பிய நேரு மாத்திரைகள் சாப்பிட்டு வந்தார்.
- துணை சபாநாயகர் ராஜவேலு உடல்நலக்கு றைவால் பாதிக்கப்பட்டு சென்னையில் சிகிச்சை பெற்று வருகிறார்
புதுச்சேரி:
புதுவை உருளை யன்பேட்டை தொகுதி சுயேட்சை எம்.எல்.ஏ நேரு. கடந்தவாரம் உடல்நிலை பாதிக்கப்பட்ட நேரு சென்னை தனியார் மருத்துவ மனையில் சேர்ந்து அறுவை சிகிச்சை செய்து கொண்டார். பின்னர் டாக்டர்கள் அறிவுறுத்தலின்படி வீட்டுக்கு திரும்பிய நேரு மாத்திரைகள் சாப்பிட்டு வந்தார். இதனிடையே சில நாட்களாக அவருக்கு தொடர் காய்ச்சல் இருந்தது.
இதையடுத்து அறுவை சிகிச்சை செய்துகொண்ட தனியார் மருத்துவமனைக்கு அவர் சென்றார். அவருக்கு டாக்டர்கள் தொடர் சிகிச்சை அளித்து வருகின்றனர். ஏற்கனவே சென்னையில் துணை சபாநாயகர் ராஜவேலு உடல்நலக்கு றைவால் பாதிக்கப்பட்டு சென்னையில் சிகிச்சை பெற்று வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
Next Story
×
X