என் மலர்
புதுச்சேரி
காவிரி நீரை தடுக்கும் காங்கிரஸ் ஆட்சிக்கு புதுவை அ.தி.மு.க. கண்டனம்
- அ.தி.மு.க. மாநாடு பாராளுமன்ற தேர்தலில் 40 தொகுதிகளிலும் வெற்றி பெறுவதற்கான அடித்தளமாக அமையும்.
- முதல்-அமைச்சருமான ஸ்டாலின் கர்நாடக காங்கிரஸ் அரசை கேட்காமல் மத்திய அரசுக்கு கடிதம் எழுதுகிறார்.
புதுச்சேரி:
புதுவை மாநில அ.தி.மு.க. செயலாளர் அன்பழகன் நிருபர்களிடம் கூறியதாவது:-
தமிழக சட்டமன்றத்தில் ஜெயலலிதா தாக்கப்பட்டது உண்மை என பேசிய கவர்னர் தமிழிசைக்கு புதுவை அ.தி.மு.க. சார்பில் நன்றி தெரிவித்து கொள்கிறோம்.
மதுரையில் 20-ந் தேதி நடைபெற உள்ள அ.தி.மு.க. மாநாடு பாராளுமன்ற தேர்தலில் 40 தொகுதிகளிலும் வெற்றி பெறுவதற்கான அடித்தளமாக அமையும்.
சுப்ரீம்கோர்ட்டு தீர்ப்பை காலில் போட்டு மிதித்து கர்நாடகத்தில் ஆட்சி செய்யும் காங்கிரஸ் கட்சி தமிழகம்-புதுவைக்கு வரவேண்டிய காவிரி நீரை தடுத்து வருகின்றனர். இதற்கு கண்டனம் தெரிவித்து கொள்கிறோம்.
காவிரி நீர் குறித்து கூட்டணியில் உள்ள தி.மு.க. தலைவரும் தமிழக முதல்-அமைச்சருமான ஸ்டாலின் கர்நாடக காங்கிரஸ் அரசை கேட்காமல் மத்திய அரசுக்கு கடிதம் எழுதுகிறார். இதனால் காரைக்கால் கடைமடை பகுதி விவசாய மக்களும் பாதிக்கப்படு கின்றனர்.
இவ்வாறு கூறினார். பேட்டியின்போது அ.தி.மு.க. இணை செயலாளர் கணேசன் உடனிருந்தார்.