என் மலர்![tooltip icon](/images/info-tooltip.svg)
புதுச்சேரி
![மணக்குள விநாயகர் செவிலியர் கல்லூரியில் எய்ட்ஸ் விழிப்புணர்வு மாரத்தான் மணக்குள விநாயகர் செவிலியர் கல்லூரியில் எய்ட்ஸ் விழிப்புணர்வு மாரத்தான்](https://media.maalaimalar.com/h-upload/2023/08/24/1937294-img8170.webp)
மாரத்தான் ஓட்டத்தில் பங்கேற்ற மாணவர்கள்.
மணக்குள விநாயகர் செவிலியர் கல்லூரியில் எய்ட்ஸ் விழிப்புணர்வு மாரத்தான்
![மாலை மலர் மாலை மலர்](/images/authorplaceholder.jpg?type=1&v=2)
- மருத்துவ அதிகாரி டாக்டர் ஐஸ்வர்யா முன்னிலை வகித்து மாரத்தான் ஓட்டத்தை தொடங்கி வைத்தனர்.
- மாரத்தான்போட்டியில் சுமார் 100 செவிலியர் கல்லூரியின் மாணவ-மாணவிகள் பங்கேற்றனர்.
புதுச்சேரி:
புதுச்சேரியில் உள்ள மணக்குள விநாயகர் செவிலியர் கல்லூரியில் செவிலியர் கல்லூரியின் ரெட் ரிப்பன் கிளப் தேசிய எய்டஸ் கட்டுப்பாட்டு அமைப்பு மற்றும் பாண்டிச்சேரி எய்ட்ஸ் கட்டுப்பாட்டு வாரியம் சார்பில் எய்ட்ஸ் விழிப்பு ணர்வு மாரத்தான் ஓட்டம் நடந்தது.
நிகழ்ச்சிக்கு மணக்குள விநாயகர் செவிலியர் கல்லூரி முதல்வர் டாக்டர் முத்தமிழ் செல்வி, திருபுவனை ஆரம்ப சுகாதார நிலையத்தின் மருத்துவ அதிகாரி டாக்டர் ஐஸ்வர்யா முன்னிலை வகித்து மாரத்தான் ஓட்டத்தை தொடங்கி வைத்தனர்.
போலீஸ் குழு ஆம்புலன்ஸ் குழு பங்கேற்றனர். டாக்டர் சபரி ராஜன், நர்சு ஜெயபிரதீப், செவிலியர் கல்லூரியின் ரெட் ரிப்பன் கிளப் ஒருங்கிணைப்பா ளர் சக்திபிரியா, உடற்கல்வி ஆசிரியர் விஜயகுமார். மற்றும் பேராசிரியர்கள் இணை பேராசிரியர்கள், துணை பேராசிரியர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்ட னர். மாரத்தான்போட்டியில் சுமார் 100 செவிலியர் கல்லூரியின் மாணவ-மாணவிகள் பங்கேற்றனர். செவிலியர் கல்லூரி வளாகம் வரை மாரத்தான் ஓட்டம் நடைப்பெற்றது.
முதல் 10 இடங்களைப் பெற்ற மாணவர்கள் அடுத்த கட்ட போட்டிக்கு தேர்வு செய்யப்பட்டனர்.
நிகழ்ச்சிக்கான ஏற்பாடு களை ஒருங்கிணைப்பாளர் உதவி பேராசிரியை சக்திபிரியா செய்திருந்தார்.