search icon
என் மலர்tooltip icon

    புதுச்சேரி

    அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவில் மயான கொள்ளை திருவிழா
    X

    அங்காளம்மன் கோவில் கொடியேற்றத்தையொட்டி கரக ஊர்வலம் நடைபெற்ற காட்சி.

    அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவில் மயான கொள்ளை திருவிழா

    • பூரணாங்குப்பம் அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவிலில் மயான கொள்ளை திருவிழா நடைபெறுகிறது.
    • முக்கிய வீதிகள் வழியாக கரகம் விதி உலா வந்து கோவிலை வந்தடைந்தது.

    புதுச்சேரி:

    பூரணாங்குப்பம் அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவிலில் மயான கொள்ளை திருவிழா வருகிற 26-ந் தேதி நடைபெறுகிறது.

    அதனை முன்னிட்டு கொடியேற்றம் நடைபெற்றது. முன்னதாக நோணாங்குப்பம் சுண்ணாம்பாற்றில் இருந்து புனித நீர் திரட்டி கரகம் புறப்பாடு நடைபெற்றது.

    முக்கிய வீதிகள் வழியாக கரகம் விதி உலா வந்து கோவிலை வந்தடைந்தது. அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆதரனை நடைபெற்று மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. தொடர்ந்து கொடியேற்றமும் நடைபெற்றது. நண்பகல் 12 மணி அளவில் அலங்கரிக்கப்பட்ட அங்காள பரமேஸ்வரி அம்மன் முதல் மயான கொள்ளை உற்சவம் நடை பெற்றது.

    ஏற்பாடுகளை அறங்காவலர் குழு தலைவர் எழில்ராஜா, துணைத் தலைவர் ராஜசேகரன், செயலாளர் கிருஷ்ணமூர்த்தி, பொருளாளர் அமுர்தலிங்கம், உறுப்பினர் சத்தியவேணி மற்றும் கிராம பொதுமக்கள் செய்திருந்தனர்.

    Next Story
    ×