என் மலர்![tooltip icon](/images/info-tooltip.svg)
புதுச்சேரி
![லஞ்ச ஒழிப்பு விழிப்புணர்வு லஞ்ச ஒழிப்பு விழிப்புணர்வு](https://media.maalaimalar.com/h-upload/2022/10/23/1780909-img7369.jpg)
லஞ்ச ஒழிப்பு விழிப்புணர்வு நடைபெற்ற காட்சி.
லஞ்ச ஒழிப்பு விழிப்புணர்வு
![மாலை மலர் மாலை மலர்](/images/authorplaceholder.jpg?type=1&v=2)
- புதுவை, மணக்குள விநாயகர் தொழில்நுட்ப கல்லூரியில் இன்ஸ்டியூஷன் ஆப் என்ஜினீயர்ஸ், (இந்தியா), எந்திரவியல் துறை மாணவர் அமைப்பு சார்பில் லஞ்ச ஒழிப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.
- எந்திரவியல் துறை தலைவர் மற்றும் இன்ஸ்டியூஷன் ஆப் என்ஜினீயர்ஸ் (இந்தியா), புதுவை மாநில மைய தலைவர் ராஜாராம் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டார்.
புதுச்சேரி:
புதுவை, மணக்குள விநாயகர் தொழில்நுட்ப கல்லூரியில் இன்ஸ்டியூஷன் ஆப் என்ஜினீயர்ஸ், (இந்தியா), எந்திரவியல் துறை மாணவர் அமைப்பு சார்பில் லஞ்ச ஒழிப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.
மணக்குள விநாயகர் கல்விக்குழுமம் தலைவர் தனசேகரன் தலைமை தாங்கினார். துணை தலைவர் சுகுமாறன், செயலாளர் டாக்டர் நாராயணசாமிகேசவன் முன்னிலை வகித்தனர். முதல்வர் மலர்க்கண் வரவேற்றார்.
எந்திரவியல் துறை தலைவர் மற்றும் இன்ஸ்டியூஷன் ஆப் என்ஜினீயர்ஸ் (இந்தியா), புதுவை மாநில மைய தலைவர் ராஜாராம் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டார். எந்திரவியல் துறை உதவி பேராசிரியர் மதியரசு சிறப்பு அழைப்பாளர்களை வரவேற்று பேசினார்.
லஞ்ச ஒழிப்பு மற்றும் கண்காணிப்பு துறை போலீஸ் சூப்பிரண்டு, பாஸ்கரன், மாணவர்களிடையே சமூகத்தில் உள்ள பல தரப்பட்ட லஞ்ச ஒழிப்பு தொடர்பாக அரசு இயற்றிய சட்டங்கள் பற்றியும், லோக்பால் மற்றும் லோக் ஆயுக்தா சட்டங்கள் பற்றி கூறினார். உதவி பேராசிரியர் கணேஷ்குமார் நன்றி கூறினார்.