என் மலர்
புதுச்சேரி
X
அரியூர் வெங்கடேஸ்வரா பாராமெடிக்கல் கல்லூரியில்முதலாம் ஆண்டு மாணவர்களுக்கு வரவேற்பு
Byமாலை மலர்28 Sept 2023 2:50 PM IST
- மாணவர்களுக்கு வரவேற்பு விழா கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது.
- முதலாம் ஆண்டு மாணவர்களை வாழ்த்தி பேசினார்.
புதுச்சேரி:
அரியூர் ஸ்ரீ வெங்கடேஸ்வரா பாராமெடிக்கல் கல்லூரியில் பி.எஸ்.சி. எம்.எல்.டி. மற்றும் பி.எஸ்.சி. எம்.ஆர்.ஐ.டி. படிப்பிற்கான முதலாம் ஆண்டு மாணவர்களுக்கு வரவேற்பு விழா கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது.
கல்வி குழுமத்தின் முதன்மை இயக்க அதிகாரி டாக்டர் வித்யா கலந்து கொண்டு குத்துவிளக்கேற்றி முதலாம் ஆண்டு மாணவர்களை வாழ்த்தி பேசினார்.
நிகழ்ச்சியில் மருத்துவக் கல்லூரியின் இயக்குனர் டாக்டர் ரத்தினசாமி, பொது மேலாளர் சவுந்தர ராஜன் , கல்வியியல் ஆலோசகர் வெங்கட்ராமன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கல்லூரியின் முதல்வர் மற்றும் டாக்டர்.ஆனந்த வைரவேல் வர வேற்று பேசினார் .
நிகழ்ச்சியில் துணை பேராசிரி யர்கள், மாணவர்கள் மற்றும் முதலாம் ஆண்டு மாணவர்களின் பெற்றோர்கள் கலந்து கொண்டனர். முடிவில் டயாலிஸிஸ் கல்லூரியின் துணை பேராசிரியை சவுமியா நன்றி கூறினார்.
Next Story
×
X