search icon
என் மலர்tooltip icon

    புதுச்சேரி

    தனியார் நிறுவன ஊழியர் மீது தாக்குதல்
    X
    கோப்பு படம்.

    தனியார் நிறுவன ஊழியர் மீது தாக்குதல்

    • இவர் அப்பகுதியில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார்.
    • மணிவண்ணனுக்கு தனது புகை படத்தை முகநூலில் அனுப்பினார்.

    புதுச்சேரி:

    நெட்டப்பாக்கம் அருகே பண்ட சோழ நல்லூர் சிவன் கோவில் தெருவை சேர்ந்தவர் அஜித் குமார். இவர் அப்பகுதியில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார்.

    மேலும் இவர் வாத்திய குழுவும் வைத்து நடத்தி வருகிறார். கடந்த 2 நாட்களுக்கு முன்பு அஜித் குமார் தனது பிறந்த நாளை யொட்டி கல் மண்டபத்தை சேர்ந்த தனது நண்பர் மணிவண்ணனுக்கு தனது புகை படத்தை முகநூலில் அனுப்பினார்.

    அந்த புகை படத்தை பண்ட சோழ நல்லூரை சேர்ந்த ஆதித்தியன் என்பவர் தவறாக சித்தரித்து மணிவண்ணனுக்கு திருப்பி அனுப்பினார்.

    இதனையறிந்த அஜித் குமார் செல்போன் மூலம் ஆதித்தியனிடம் கேட்ட போது உன்னையும், உனது தம்பியையும் இன்று இரவுக்குள் கொலை செய்து விடுவேன் என்று ஆதித்தி யன் மிரட்டல் விடுத்தார்.

    மேலும் அன்று நள்ளிரவு ஆதித்தியன் தனது தந்தை ஏழுமலை, சகோதரி அம்சவள்ளி ஆகியோருடன் அஜித் குமார் வீட்டுக்கு வந்தனர். அவர்கள் அஜித்குமாரையும், அவரது தம்பி பிரதாப்பையும் தகாத வார்த்தைகளால் திட்டி தாக்கினர்.

    மேலும் தடுக்க முயன்ற அஜித்குமாரின் தாயாரையும் அவர்கள் தாக்கியதோடு 3 பேரையும் கொலை செய்து விடுவதாக மிரட்டி விட்டு சென்றனர். இந்த தாக்குதலில் காயமடைந்த அஜித்குமார் அவரது சகோதரர் பிரதாப் மற்றும் இவர்களது தாய் ஆகிய 3 பேரும் தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றனர்.

    பின்னர் இதுகுறித்து அஜித்குமார் நெட்டப்பாக்கம் போலீசில் புகார் செய்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    Next Story
    ×