search icon
என் மலர்tooltip icon

    புதுச்சேரி

    வியாபாரி மீது தாக்குதல்
    X

    கோப்பு படம்.

    வியாபாரி மீது தாக்குதல்

    • புதுவை முதலியார்பேட்டை தியாகு முதலியார் நகரை சேர்ந்தவர் நாகராஜ்.
    • கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பு ஒரு விபத்தில் கண்பார்வை இழந்தவர்.

    புதுச்சேரி:

    புதுவை முதலியார்பேட்டை தியாகு முதலியார் நகரை சேர்ந்தவர் நாகராஜ். கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பு ஒரு விபத்தில் கண்பார்வை இழந்தவர். தற்போது அவர், சிறிய அளவில் மளிகை கடை நடத்தி வருகிறார். இவருக்கு மனைவி, மகள் உள்ளனர். கடந்த 12-ந்தேதி காலையில் இவர் வியாபாரம் செய்து கொண்டு இருந்தார்.

    வீட்டில் மனைவி மட்டும் தனியாக இருந்தபோது, மாரியம்மன் நகரை சேர்ந்த ஸ்ரீதர் என்பவர், நாகராஜின் மனைவிடம் தகராறு செய்து சென்றுள்ளார். இதனையடுத்து நாகராஜ், தனது மனைவியுடன் சென்று கடந்த 15-ந்தேதி தட்டிக்கேட்டுள்ளார்.

    இதனால் ஆத்திரமடைந்த ஸ்ரீதர், அவரது தம்பி ஸ்ரீகாந்த் ஆகியோர் தரக்குறைவாக திட்டி, கல்லால் தாக்கியதாக தெரிகிறது.

    இதுகுறித்து நாகராஜ், உருளையன்பேட்டை போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் ஸ்ரீதர், ஸ்ரீகாந்த் ஆகிய 2 பேர் மீதும் தரக்குறைவாக திட்டி தாக்குதல் உள்ளிட்ட 4 பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×