என் மலர்
புதுச்சேரி
தனியார் கம்பெனி ஊழியரை தாக்கி கொலை மிரட்டல்
- வில்லியனூரில் தனியார் கம்பெனி ஊழியரை தாக்கி கொலை மிரட்டல் விடுத்த 4 பேர் கும்பலை போலீசார் தேடி வருகிறார்கள்.
- மேலும் தகாத வார்த்தைகளால் திட்டி கொலை செய்து விடுவதாக மிரட்டி விட்டு சென்று விட்டனர்.
புதுச்சேரி:
வில்லியனூரில் தனியார் கம்பெனி ஊழியரை தாக்கி கொலை மிரட்டல் விடுத்த 4 பேர் கும்பலை போலீசார் தேடி வருகிறார்கள்.
நெட்டப்பாக்கம் அருகே பனையடி குப்பம் அங்காளம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் பூமிநாதன் (வயது34). இவர் வில்லியனூர் அருகே ஒதியம்பட்டில் உள்ள ஒரு தனியார் கம்பெனியில் ஊழியராக வேலை பார்த்து வருகிறார். வழக்கம் போல் மோட்டார் சைக்கிளில் பூமிநாதன் வேலைக்கு வந்து கொண்டிருந்தார்.
வில்லியனூர் உத்திர வாணி பேட்டில் உள்ள பெட்ரோல் பங்க் அருகே வந்த போது திடீரென 4 பேர் கொண்ட கும்பல் பூமிநாதனை வழிமறித்தது. அவர்கள் கையில் வைத்திருந்த கட்டை உள்ளிட்ட ஆயுதங்களால் பூமிநாதனை சரமாரியாக தாக்கினார்கள்.
மேலும் தகாத வார்த்தைகளால் திட்டி கொலை செய்து விடுவதாக மிரட்டி விட்டு சென்று விட்டனர்.
இதுகுறித்து பூமிநாதன் வில்லியனூர் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து பூமிநாதனை தாக்கிய 4 பேர் கும்பலை தேடி வருகிறார்கள்.