என் மலர்
புதுச்சேரி
ஆட்டிசம் விழிப்புணர்வு மாநாடு-சபாநாயகர் ஏம்பலம் செல்வம் தொடங்கி வைத்தார்
- புதுவை கடற்கரை காந்தி திடலில் ஸ்வ ஸ்திக் அறக்கட் டளை மற்றும் ஆத்திச்சூடி சிறப்பு பள்ளி இணை ந்து ஆட்டிசம் நோய் குறித்த விழிப்புணர்வு மாநாட்டை நடத்தியது.
- தங்கும் இடத்துடன் கூடிய இல்லம் மற்றும் போதிய செயல்முறை மருத்துவர்கள் வசதி ஏற்படுத்தி கொடுக்க வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டது.
புதுச்சேரி:
புதுவை கடற்கரை காந்தி திடலில் ஸ்வ ஸ்திக் அறக்கட் டளை மற்றும் ஆத்திச்சூடி சிறப்பு பள்ளி இணை ந்து ஆட்டிசம் நோய் குறித்த விழிப்புணர்வு மாநாட்டை நடத்தியது.
விழாவில் சபாநாயகர் ஏம்பலம் செல்வம் பங்கேற்று மாநாட்டை தொடங்கி வைத்ததுடன், பள்ளி தாளாளர் டாக்டர் வி.ஆர்.சத்தியவண்ணன் எழுதிய 'ஆட்டிசம் ஒரு தெளிவு' பாகம்-2 புத்தகத்தை வெளியிட்டார். அதை அரியாங்குப்பம்
எம்.எல்.ஏ. பாஸ்கர், அரிச்சுவடி மனநல இயக்குனர் டாக்டர் ஆர்.இளவழகன், டாக்டர் நவசக்தி, டாக்டர் கலையரசி ஆகியோர் பெற்றுக்கொண்டனர். அப்போ து சபாநாயகரிடம், ஆட்டிசம் குழந்தை களுக்காக முதல்வரின் மருத்துவ காப்பீடு திட்டம், ஆட்டிசம் குழந்தைகளின் கணக்கெடுப்பு, தங்கும் இடத்துடன் கூடிய இல்லம் மற்றும் போதிய செயல்முறை மருத்துவர்கள் வசதி ஏற்படுத்தி கொடுக்க வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டது.
மாநாட்டில் டாக்டர்கள் கோபாலகிருஷ்ணன், முரளி, கீதா, தீபா, புண்ணியமூர்த்தி, மகேந்திரன், அரிச்சுவடி மனநல மைய டிரஸ்டி அரசம்மா
தேவி ரவிச்சந்திரன் உள்பட பலர் கலந்து கொண்டனர். நிறைவாக மாற்றுத்திறனாளி குழந்தைகளின் கலை நிகழ்ச்சி நடந்தது.