என் மலர்
புதுச்சேரி
சாதனையாளர்களுக்கு விருது-சபாநாயகர் ஏம்பலம் செல்வம் வழங்கினார்
- சாதனையாளர்களுக்கு விருது வழங்கும் விழா மற்றும் பாராட்டு விழா பூரணாங்குப்பத்தில் உள்ள ஜோதி சிலம்பம் பயிற்சி மையத்தில் நடைபெற்றது.
- போலீஸ்துறை ஐ.ஜி. சந்திரன் ஆகியோர் கலந்து கொண்டு வாழ்த்துரை வழங்கி சாதனையாளர்களுக்கு விருதுகளை வழங்கினர்.
புதுச்சேரி:
புதுவை அரசு கலை மாமணி விருதாளர் சங்கம், ஜோதி சிலம்பம் பயிற்சி மையம் மற்றும் தனசுந்தராம்பாள் அறக்கட்டளை ஆகியவை இணைந்து பூரணாங்குப்பம் பகுதியை சேர்ந்த சாதனையாளர்களுக்கு விருது வழங்கும் விழா மற்றும் பாராட்டு விழா பூரணாங்குப்பத்தில் உள்ள ஜோதி சிலம்பம் பயிற்சி மையத்தில் நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில் தலைமை விருந்தினராக சபாநாயகர் ஏம்பலம் செல்வம் மற்றும் சிறப்பு விருந்தினராக போலீஸ்துறை ஐ.ஜி. சந்திரன் ஆகியோர் கலந்து கொண்டு வாழ்த்துரை வழங்கி சாதனையாளர்களுக்கு விருதுகளை வழங்கினர்.
மேலும் இந்த நிகழ்ச்சியில் உழவர்கரை நகராட்சி வருவாய் அதிகாரி அய்யனார் தனசுந்தராம்பாள் அறக்கட்டளை நிறுவனர் ஆனந்த் ஜோதி சிலம்ப குரு குலத்தின் நிறுவனர் ஜோதி செந்தில்கண்ணன், பா.ஜனதா கூட்டுறவு பிரிவு அமைப்பாளர் வெற்றிச்செல்வன்,
கலைமாமணி விருதாளர் சங்க தலைவர் அரியபுத்திரன் செயலாளர் தமிழ்வாணன் மற்றும் பல்வேறு சமூக அமைப்புகளைச் சேர்ந்த திருவேங்கடம் கணேஷ் கலைவாணி உள்ளிட்ட சமூக ஆர்வலர்கள் கலந்து கொண்டனர்.