search icon
என் மலர்tooltip icon

    புதுச்சேரி

    விநாயகா மிஷன் நிகர்நிலை பல்கலைக்கழகத்திற்கு விருது
    X

    விருதினை பல்கலைக்கழகத்தின் அலைடு ெஹல்த் சயின்ஸ் துறையின் டீன் பேராசிரியர் டாக்டர். செந்தில்குமார் மற்றும் நிர்வாக பிரிவின் துணைப்பதிவாளர் டாக்டர். ராஜசேகரன் ஆகியோர் பெற்றுக் கொண்ட காட்சி. 

    விநாயகா மிஷன் நிகர்நிலை பல்கலைக்கழகத்திற்கு விருது

    • இவ்வாண்டிற்கான மாநாட்டினையும், விருது வழங்கும் நிகழ்ச்சிகளை மருத்துவ தொழிற்நுட்பம் மற்றும் சுகாதார துறை என்ற தலைப்பில் சென்னையில் நடத்தியது.
    • மருத்துவ கல்வியில் சிறந்து விளங்கும் நிறுவனம் என்ற விருது வழங்கப்பட்டு அங்கீகரிக்கப்பட்டுள்ளது.

    புதுச்சேரி:

    தென்னிந்திய வர்த்தக மற்றும் தொழிற்துறை அமைப்பானது இந்திய வணிகத்திற்கு தேசிய மற்றும் சர்வதேச அளவில் சேவை புரிந்து வரும் ஒர் முன்னணி அமைப்பாகும்.

    இது ஆண்டுதோறும் புதிய தொழிற்நுட்பம் சார்ந்த பல்வேறு பிரிவுகளில் மாநாடுகளையும், அவற்றில் சிறந்து விளங்கும் நிறுவனங்களை அங்கீகரிக்கும் விதமாக விருதுகளை வழங்கி வருகிறது.

    இதனடிப்படையில் இவ்வாண்டிற்கான மாநாட்டினையும், விருது வழங்கும் நிகழ்ச்சிகளை மருத்துவ தொழிற்நுட்பம் மற்றும் சுகாதார துறை என்ற தலைப்பில் சென்னையில் நடத்தியது.

    இதில் விநாயகா மிஷன் நிகர்நிலை பல்கலைக்கழகத்திற்கு மருத்துவ கல்வியில் சிறந்து விளங்கும் நிறுவனம் என்ற விருது வழங்கப்பட்டு அங்கீகரிக்கப்பட்டுள்ளது.

    இவ்விருதானது பல்கலைக்கழகத்தின் வேந்தர் டாக்டர் கணேசன் வழிகாட்டுதலின்படியும், இயக்குனர் டாக்டர் அனுராதா கணேசன் ஆலோசனையின்படியும் விண்ணப்பிக்கப்பட்டது.

    இம்மாநாட்டில் பல்வேறு சுகாதார துறையை சார்ந்த வல்லுநர்கள், தொழில்நுட்ப வல்லுநர்கள், கல்வி நிறுவனங்களை சார்ந்த கல்வியாளர்கள் என பலர் பங்கேற்றனர்.

    இவ்விருதினை பல்கலைக்கழகத்தின் அலைடு ெஹல்த் சயின்ஸ் துறையின் டீன் பேராசிரியர் டாக்டர். செந்தில்குமார் மற்றும் நிர்வாக பிரிவின் துணைப்பதிவாளர் டாக்டர். ராஜசேகரன் ஆகியோர் பெற்றுக் கொண்டனர்.

    Next Story
    ×