என் மலர்
புதுச்சேரி
திருக்கனூர் பகுதியில் விழிப்புணர்வு பேனர்
- சந்தேகப்படும்படியான நபர்களை செல்போனில் படம்பிடிக்க போலீசார் அறிவுறுத்தல்
- சீனியர் போலீஸ் சூப்பிரண்டு போலீஸ் நிலையம் வெளியே வைக்கப்பட்டுள்ள பொது மக்களுக்கு விழிப்புணர்வு அறிவிப்பு பேனரை பார்வையிட்டார்.
புதுச்சேரி:
புதுவையை அடுத்த திருக்கனூர் போலீஸ் நிலைய எல்லைக் குட்பட்ட பகுதிகளான செட்டிப் பட்டை சேர்ந்த இன்ஸ்பெக்டர் சண்முகம் வீடு உள்ளிட்ட ஆண்டியார் பாளையம், வாதானூர், மண்ணாடிப் பட்டு, சந்தை புதுகுப்பம் கிராமங்களில் வீட்டின் பின்புற கதவை உடைத்து மர்ம நபர்கள் நகை, பணம் மற்றும் வீட்டு உபயோக பொருட்களை கொள்ளையடித்து சென்றனர்.
தொடர் கொள்ளை சம்பவங்கள் அந்தபகுதி மக்களிடம் பீதியை ஏற்படுத்தியுள்ளது.
திருக்கனூர் போலீசார் விசாரணை நடத்தியும் திருட்டு சம்பவங்கள் தொடர்பாக போலீசாருக்கு இதுவரையில் எந்தவித தடயமும் கிடைக்கவில்லை. இதனால் குற்றவாளிகளை கண்டு பிடிக்க முடியாமல் போலீசார் திணறி வருகின்றனர்.
போலீசார் தொடர் திருட்டு சம்பவங்களை தடுக்கும் பொருட்டு பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்கள் மற்றும் போலீஸ் நிலையம் முன்பு விழிப்புண்வு அறிவிப்பு பேனர் வைக்கப் பட்டுள்ளது. சீனியர் ேபாலீஸ் சூப்பிரண்டு நாரா சைதன்யா, திருக்கனூர் போலீஸ் நிலையத்திற்கு திடீரென வந்து ஆய்வு மேற்கொண்டார்.
அப்போது, தொடர் திருட்டு சம்பவங்களுகான காரணங்கள் குறித்து இன்ஸ்பெக்டர் ஆறுமுகம், சப்-இன்ஸ்பெக்டர் புனிதராஜா ஆகியோரிடம் கேட்டறிந்தார். பின்னர், போலீஸ் நிலையத்தில் முக்கிய ஆவணங்கள் வைக்கப்பட்டுள்ள அறையை ஆய்வு செய்த சீனியர் போலீஸ் சூப்பிரண்டு போலீஸ் நிலையம் வெளியே வைக்கப்பட்டுள்ள பொது மக்களுக்கு விழிப்புணர்வு அறிவிப்பு பேனரை பார்வையிட்டார்.
மேலும் திருட்டு சம்பவங்களில் தொடர்பு டைய மர்ம நபர்களை விரைந்து பிடிப்பதற்கான நட வடிக்கையை தீவி ரப்படுத்த உத்தரவிட்டார்.