search icon
என் மலர்tooltip icon

    புதுச்சேரி

    ஆயுஷ் மருத்துவமனை முழு வீச்சில் இயக்க நடவடிக்கை
    X

    கோப்பு படம்.

    ஆயுஷ் மருத்துவமனை முழு வீச்சில் இயக்க நடவடிக்கை

    • எதிர்கட்சி தலைவர் சிவா வலியுறுத்தல்
    • மருத்துவ பணியாளர்கள், உபக ரணங்கள், உள்கட்டமைப்பு வசதிகள் ஏதும் ஏற்படுத்தாமல் உள்ளதும் தெரியவந்தது.

    புதுச்சேரி:

    வில்லியனூரில் ரூ.7 கோடியே 93 லட்சம் செலவில் 4 ஆயிரம் சதுர அடியில் தரைதளம் உள்ளிட்ட 4 மாடி கட்டிடங்களுடன் ஆயுஷ் மருத்துவமனை கட்டப்பட்டு ள்ளது. ஜனாதிபதி கடந்த 7-ந் தேதி காணொலி காட்சி மூலம் திறந்து வைத்தார்.

    இந்த நிலையில் வில்லியனூரில் இயங்கி வந்த ஆயுர்வேதா கிளை மருத்துவமனையில் பணியாற்றிய டாக்டர்கள், செவிலியர்கள் மற்றும் மருந்தாளுநர்களை கொண்டு ஆயுஷ் மருத்துவ மனை இயக்கப்படுவதாக கிடைத்த தகவலின் அடிப்படையில், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் சிவா ஆயுஷ் மருத்துவமனையை ஆய்வு செய்தார்.

    அப்போது, பணியில் இருந்து ஆயுர்வேத பிரிவின் நோடல் அதிகாரி டாக்டர் பத்மவதம்மா, மருத்துவ அதிகாரிகள் ஜீவானந்த், முத்துலட்சுமி ஆகியோரிடம் மருத்துவமனை இயக்கம், நோயாளிகளின் வருகை, மருந்தகத்தில் விநியோ கிக்கப்படும் மருந்துகள் குறித்தும் கேட்டறிந்தார்.

    தொடர்ந்து, அனைத்து தளங்களையும் சென்று ஆய்வு செய்தார்.

    ஆனால், ஆயுர்வேத கிளினிக்காக செயல்பட்டதை ஆயுஷ் மருத்துவமனைக்கு மாற்றி உள்ளதும், ஆயுஷ் மருத்துவமனைக்கு என்று டாக்டர்கள், மருத்துவ பணியாளர்கள், உபக ரணங்கள், உள்கட்டமைப்பு வசதிகள் ஏதும் ஏற்படுத்தாமல் உள்ளதும் தெரியவந்தது.

    இதுகுறித்து தமது வேதனையை தெரிவித்த எதிர்க்கட்சித் தலைவர் சிவா மருத்துவமனைக்கு தேவை யான டாக்டர்கள், பணியாளர்கள், ஆம்புலன்ஸ், ஈ.சி.ஜி, எக்ஸ்.ரே, ஸ்கேன் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் ஏற்படுத்தி ஆயுஷ் மருத்துவமனை முழு வீச்சில் இயங்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் துரித நடவடி க்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.

    Next Story
    ×