search icon
என் மலர்tooltip icon

    புதுச்சேரி

    பாரத மாதா சிலை ரதயாத்திரை ஊர்வலம்
    X

    அசோக்பாபு எம்.எல்.ஏ. தலைமையில் பாரத மாதா ரதயாத்திரைக்கு வரவேற்பு அளிக்கப்பட்ட காட்சி.

    பாரத மாதா சிலை ரதயாத்திரை ஊர்வலம்

    • முதலியார்பேட்டை தொகுதியில் பாரத மாதா சிலை ரதயாத்திரைக்கு அசோக்பாபு எம்.எல்.ஏ. தலைமையில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.
    • 75-வது சுதந்திர விழாவை யொட்டி பா.ஜனதா சார்பில் பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகிறது.

    புதுச்சேரி:

    முதலியார்பேட்டை தொகுதியில் பாரத மாதா சிலை ரதயாத்திரைக்கு அசோக்பாபு எம்.எல்.ஏ. தலைமையில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.

    75-வது சுதந்திர விழாவை யொட்டி பா.ஜனதா சார்பில் பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகிறது. அதன் ஒரு கட்டமாக புதுவை முழுவதும் பாரத மாதா ரதயாத்திரை ஊர்வலத்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதற்காக பா.ஜனதா மாநில தலைவர் சாமி நாதன், அமைச்சர் நமச்சிவாயம் ஆகியோரின் ஆலோசனைப்படி புதுவை மாநில பா.ஜனதா துணைத்தலைவர் செல்வம் தலைமையில் கமிட்டி அமைக்கப்பட்டு புதுவை முழுவதும் பாரத மாதா ரதயாத்திரை ஊர்வலம் நடைபெற்று வருகிறது.

    இந்த ரத யாத்திரை ஊர்வலம் இன்று காலை முதலியார்பேட்டை தொகுதிக்கு வந்தது. ரோடியர் ஆலை ரோட்டில் உள்ள பா.ஜனதா சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் அசோக்பாபு எம்.எல்.ஏ, தலைமையில் ரத யாத்திரைக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. பாரத மாதா சிலைக்கு ஆராதனை செய்து ஏராளமானோர் வணங்கினர். இதனை யொட்டி பொது மக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

    இந்நிகழ்ச்சியில் நிர்வாகிகள் விஜயரங்கன், அய்யனராப்பன், நடராஜ், சரவணன், தமிழரசன், பிரவீன், சத்தியா, செல்வம், லட்சுமி, மஞ்சுளா, சாந்தி, கீதா,அய்யப்பன், ஸ்டீபன்ராஜ், வேலு, பாபு, பாண்டு, கணேசன், தில்லைகோவிந்தன், சுந்தரமூர்த்தி, பார்த்தீபன், கார்த்திக், சங்கர், பிரகாஷ், ஆனந்த், அஜித், முருகன், சக்திவேல், கிருஷ்ணமூர்த்தி, நாகமுத்து, அசோக் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×