search icon
என் மலர்tooltip icon

    புதுச்சேரி

    புதிய ஆழ்துளை கிணறு அமைக்க பூமி பூஜை
    X

    புதிய ஆழ்துளை கிணறு அமைக்க பூமி பூஜையை அங்காளன் எம்.எல்.ஏ. தொடங்கி வைத்த காட்சி.

    புதிய ஆழ்துளை கிணறு அமைக்க பூமி பூஜை

    • அங்காளன் எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார்
    • கிராமங்களில் உள்ள 4,000 குடும்பத்தினர் பயனடைவார்கள் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

    புதுச்சேரி:

    மண்ணாடிப்பட்டு கொம்யூன் திருபுவனை சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட சன்னியாசிக்குப்பம் மற்றும் பிடாரிக்குப்பம் கிராமங்களில் தற்போது நிலவி வரும் குடிநீர் பற்றாக்குறையை போக்குவதற்காக சமுதாய நலக்கூடம் அருகில் பொதுப்பணித்துறை மூலமாக ரூ.14.60 லட்சம் திட்ட மதிப்பீட்டில் புதிய ஆழ்துளை கிணறு அமைப்பதற்கான பணிகளை திருபுவனை தொகுதியின் அங்காளன் எம்.எல்.ஏ. கலந்து கொண்டு பூமி பூஜை செய்துபணியினை தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் பொதுப்பணித்துறை தலைமை பொறியாளர் பழனியப்பன், கண்காணிப்பு பொறியாளர் பாஸ்கரன், கிராமக் குடிநீர் திட்ட உதவி பொறியாளர் பீனாராணி, இளநிலை பொறியாளர் சுதர்சனம், மண்ணாடிப்பட்டு கொம்யூன் பஞ்சாயத்து ஆணையர்

    எழில்ராஜன், உதவி பொறியாளர் மல்லிகார்ஜுனன், இளநிலை பொறியாளர் பாஸ்கர், மற்றும் ஆதரவாளர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர். மேலும் புதியதாக அமைக்கக்கூடிய ஆழ்துளை கிணற்றின் மூலமாக சன்னியாசிக்குப்பம் மற்றும்

    பிடாரிக்குப்பம் கிராமங்களில் உள்ள 4,000 குடும்பத்தினர் பயனடைவார்கள் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

    Next Story
    ×