என் மலர்
புதுச்சேரி
X
சாலை, கழிவுநீர் கால்வாய் பணிக்கு பூமி பூஜை-அங்காளன் எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார்
Byமாலை மலர்6 April 2023 2:43 PM IST
- ரூ.24 லட்சத்து 40 ஆயிரம் செலவில் உட்புற சாலைகள் மற்றும் கழிவு நீர் வாய்க்கால்கள் மேம்படுத்துவதற்கான பூமி பூஜை நடைபெற்றது.
- உதவி பொறியாளர் மல்லிகார்ஜுணன், இளநிலை பொறியாளர் பாஸ்கர் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
புதுச்சேரி:
புதுவை மாநிலம் திருபுவனை தொகுதி க்குட்பட்ட மதகடிப்பட்டு பாளையம் கஸ்தூரிபாய் நகரில் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியின் கீழ் ரூ.24 லட்சத்து 40 ஆயிரம் செலவில் உட்புற சாலைகள் மற்றும் கழிவு நீர் வாய்க்கால்கள் மேம்படுத்துவதற்கான பூமி பூஜை நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் அங்காளன் எம்.எல்.ஏ. தலைமையேற்று பூமி பூஜை நிகழ்ச்சியினை தொடங்கி வைத்தார்.
மேலும் இந்நிகழ்ச்சியில் மண்ணாடிப்பட்டு கொம்யூன் பஞ்சாயத்து ஆணையர் எழில் ராஜன், உதவி பொறியாளர் மல்லிகார்ஜுணன், இளநிலை பொறியாளர் பாஸ்கர் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
Next Story
×
X