search icon
என் மலர்tooltip icon

    புதுச்சேரி

    அரசு பள்ளி மாணவர்களுக்கு புத்தகபை-நேரு எம்.எல்.ஏ. வழங்கினார்
    X

    மாணவர்களுக்கு புத்தக பைகளை நேரு எம்.எல்.ஏ., கோஜிரியோ கராத்தே சங்கத்தின் மாநில பொதுச் செயலாளர் கராத்தே சுந்தர்ராஜன் ஆகியோர் வழங்கிய காட்சி.   

    அரசு பள்ளி மாணவர்களுக்கு புத்தகபை-நேரு எம்.எல்.ஏ. வழங்கினார்

    • மாணவர்களுக்கும் காமராஜர் பிறந்த நாளைவிழாவை முன்னிட்டு காலணி மற்றும் புத்தகப் பை வழங்கப்பட்டது.
    • மனிதநேய மக்கள் சேவை இயக்க மூத்த நிர்வாகிகள், இளைஞர்கள், ஊர் பொதுமக்கள் கலந்து கொண்டு விழாவினை சிறப்பித்தனர்.

    புதுச்சேரி:

    கோஜிரியோ கராத்தே சங்கம் மற்றும் மனிதநேய மக்கள் சேவை இயக்கம் சார்பில் உருளையன் பேட்டை தொகுதிக்கு உட்பட்ட ராஜா நகரில் பகுதியில் அமைந்துள்ள அரசு ஆரம்பப் பள்ளியில் பயிலும் அனைத்து மாணவர்களுக்கும் காமராஜர் பிறந்த நாளைவிழாவை முன்னிட்டு காலணி மற்றும் புத்தகப் பை வழங்கப்பட்டது.

    இதில் உருளை யன்பேட்டை தொகுதி எம்.எல்.ஏ.வும் மனித நேயம் மக்கள் சேவை இயக்க நிறுவனத் தலைவருமான நேரு, புதுச்சேரி மாநில கோஜிரியோ கராத்தே சங்கத்தின் மாநில பொதுச் செயலாளர் கராத்தே சுந்தர்ராஜன் ஆகியோர் மாணவர்களுக்கு காலணி மற்றும் பள்ளி புத்தகப்பையை வழங்கினர்.

    விழாவில் பள்ளி தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரியர்கள், மனிதநேய மக்கள் சேவை இயக்க மூத்த நிர்வாகிகள், இளைஞர்கள், ஊர் பொதுமக்கள் கலந்து கொண்டு விழாவினை சிறப்பித்தனர்.

    Next Story
    ×