என் மலர்![tooltip icon](/images/info-tooltip.svg)
புதுச்சேரி
![அரசியல் காழ்ப்புணர்ச்சியால் புறக்கணிப்பு-வையாபுரி மணிகண்டன் குற்றச்சாட்டு அரசியல் காழ்ப்புணர்ச்சியால் புறக்கணிப்பு-வையாபுரி மணிகண்டன் குற்றச்சாட்டு](https://media.maalaimalar.com/h-upload/2023/01/10/1819734-img20230110123844.webp)
ஏனாம் எம்.எல்.ஏ. ஸ்ரீநிவாஸ் அசோக்கை சந்தித்து அ.தி.மு.க. மாநில துணை செயலாளர் வையாபுரி மணிகண்டன் வாழ்த்து தெரித்தார்.
அரசியல் காழ்ப்புணர்ச்சியால் புறக்கணிப்பு-வையாபுரி மணிகண்டன் குற்றச்சாட்டு
![மாலை மலர் மாலை மலர்](/images/authorplaceholder.jpg?type=1&v=2)
- புதுவை மாநில அ.தி.மு.க. துணை செயலாளர் வையாபுரி மணிகண்டன், ஏனாமில் மக்கள் நலத்திட்டங்களுக்காக 4 நாட்களாக உண்ணாவிரத போராட்டம் நடத்திய எம்.எல்.ஏ. கொல்லப்பள்ளி ஸ்ரீனிவாச அசோக்கை அவரின் வீட்டில் சந்தித்தார்.
- தேர்வு செய்யப்பட்ட முதல்-அமைச்சர் அனைத்து தொகுதிகளையும் பாரபட்சமின்றி கவனித்து, நலத்திட்டங்களை வழங்க வேண்டும்.
புதுச்சேரி:
புதுவை மாநில அ.தி.மு.க. துணை செயலாளர் வையாபுரி மணிகண்டன், ஏனாமில் மக்கள் நலத்திட்டங்களுக்காக 4 நாட்களாக உண்ணாவிரத போராட்டம் நடத்திய எம்.எல்.ஏ. கொல்லப்பள்ளி ஸ்ரீனிவாச அசோக்கை அவரின் வீட்டில் சந்தித்தார்.
அப்போது அவர் நடத்திய போராட்டம், கோரிக்கைகள் வெற்றி பெற வாழ்த்துக்களை தெரிவித்தார். பின்னர் வையாபுரி மணிகண்டன் நிருபர்களிடம் கூறியதாவது:-
முதல் முறையாக போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ள அசோக், பலமுறை அமைச்சராக இருந்தவரின் ஆதரவுடன் போட்டியிட்ட முதல்-அமைச்சரை வெற்றி பெற்றுள்ளார். இதற்கு ஏனாம் தொகுதி மக்கள் அசோக் மீது வைத்திருந்த நம்பிக்கைதான் காரணம். எம்.எல்.ஏ. தேர்தலோடு வெற்றி, தோல்வி முடிந்துவிட்டது.
தேர்வு செய்யப்பட்ட முதல்-அமைச்சர் அனைத்து தொகுதிகளையும் பாரபட்சமின்றி கவனித்து, நலத்திட்டங்களை வழங்க வேண்டும். ஏனாமில் தேர்வு செய்யப்பட்ட எம்எல்ஏவை செயல்படவிடாமல் அரசியல் செய்கின்றனர். அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக ஏனாம் தொகுதி மக்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற அரசு தயங்குகிறது. இது வன்மையாக கண்டிக்கத்தக்கது.
ஏனாமிற்கு வந்த முதல்-அமைச்சர் ரங்கசாமி, நலத்திட்டங்களை நிறைவேற்ற முடியாததற்கு புதுவைக்கு முழு அதிகாரம் இல்லாததுதான் காரணம் என தெரிவித்துள்ளார். முழு அதிகாரம் இல்லாவிட்டால் முதல்-அமைச்சர் பதவியில் ஏன் நீடிக்க வேண்டும்? மதுபான ஆலைகள், கவர்ச்சி நடன பார்களுக்கு அனுமதி வழங்க அதிகாரம் உள்ளது. மக்கள் நலத்திட்டங்களை நிறைவேற்ற அதிகாரம் இல்லையா?
சூதாட்ட விடுதிகளே இருக்கக் கூடாது என்பதுதான் அரசின் எண்ணம் என ரங்கசாமி தெரிவித்துள்ளார். சட்டசபைக்கு அருகிலேயே மிகப் பெரும் சூதாட்ட கிளப் நடந்து வருகிறது. ஏனாமில் ஏழைகளின் வருமானத்தை சூதாட்ட கிளப் நடத்தி சுரண்டி வருகின்றனர். இவற்றை முற்றிலுமாக தடை செய்ய வேண்டும் என்ற அசோக் எம்.எல்.ஏ. கோரிக்கை நியாயமானது.
மக்களுக்காக நடைபெறும் போராட்டங்கள் என்றுமே தோல்வியை சந்தித்தது கிடையாது. எங்கள் போராட்டத்தை பற்றி மக்கள் புரிந்து கொண்டுள்ளனர். எந்தவித மிரட்டலுக்கும் அஞ்சாமல் நாங்கள் மக்களுக்கான போராட்டங்களை முன்னெடுத்துச் செல்வோம்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.