என் மலர்![tooltip icon](/images/info-tooltip.svg)
புதுச்சேரி
![புதைவட கேபிள் அமைக்க வேண்டும்-பிரகாஷ்குமார் எம்.எல்.ஏ. வலியுறுத்தல் புதைவட கேபிள் அமைக்க வேண்டும்-பிரகாஷ்குமார் எம்.எல்.ஏ. வலியுறுத்தல்](https://media.maalaimalar.com/h-upload/2023/01/21/1824417-img-20230119-wa0022.webp)
எம்.எல்.ஏ. பிரகாஷ்குமார் நேரில் சென்று சந்தித்து தொகுதியில் மின்துறை சம்பந்தமான வளர்ச்சி பணிகள் குறித்து ஆலோசனை மேற்கொண்ட காட்சி.
புதைவட கேபிள் அமைக்க வேண்டும்-பிரகாஷ்குமார் எம்.எல்.ஏ. வலியுறுத்தல்
![மாலை மலர் மாலை மலர்](/images/authorplaceholder.jpg?type=1&v=2)
- முத்தியால்பேட்டை தொகுதி எம்.எல்.ஏ. பிரகாஷ்குமார் நேரில் சென்று சந்தித்து தொகுதியில் மின்துறை சம்பந்தமான வளர்ச்சி பணிகள் குறித்து ஆலோசனை மேற்கொண்டார்.
- புதைவட மின் கேபிள் அமைக்கும் பணியை மேற்கொள்ளும் படி பிரகாஷ்குமார் எம்.எல்.ஏ. கேட்டுகொண்டார். அதற்கு அதிகாரிகள் விரைவில் நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தனர்.
புதுச்சேரி:
புதுவை மின்துறை தலைமை அலுவலகத்தில் மின்துறை இயக்குனர் மற்றும் கண்காணிப்பு பொறியாளர் சண்முகத்தை, முத்தியால்பேட்டை தொகுதி எம்.எல்.ஏ. பிரகாஷ்குமார் நேரில் சென்று சந்தித்து தொகுதியில் மின்துறை சம்பந்தமான வளர்ச்சி பணிகள் குறித்து ஆலோசனை மேற்கொண்டார்.
மின்துறை கண்காணிப்பு பொறியாளர் ஸ்ரீதர், செயற்பொறியாளர் கனியமுதன், புதைவட பிரிவு செயற்பொறியாளர் செந்தில்குமார், உதவி பொறியாளர் திலகராஜ், இளநிலை பொறியாளர் குமார் ஆகியோர் முன்னிலையில் இந்த ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
கூட்டத்தில் தொகுதியில் புதியதாக உருவாகியுள்ள தனலட்சுமி கார்டன், சப்தகிரி கார்டன், அம்பேத்கர் நகர், அரவிந்தர் கார்டன், ஸ்டாலின் நகர், பட்டினத்தார் தோட்டம் ஆகிய பகுதிகளுக்கு உடனடியாக புதைவட மின் கேபிள் அமைக்கும் பணியை மேற்கொள்ளும் படி பிரகாஷ்குமார் எம்.எல்.ஏ. கேட்டுகொண்டார். அதற்கு அதிகாரிகள் விரைவில் நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தனர்.