என் மலர்![tooltip icon](/images/info-tooltip.svg)
புதுச்சேரி
![ரூ.28 லட்சத்தில் புதைவட மின் கேபிள் ரூ.28 லட்சத்தில் புதைவட மின் கேபிள்](https://media.maalaimalar.com/h-upload/2023/06/14/1898326-prakash-kumar.webp)
புதைவட மின் கேபிள் அமைக்கும் பணியை பிரகாஷ்குமார் எம்.எல்.ஏ. தொடங்கி வைத்த காட்சி.
ரூ.28 லட்சத்தில் புதைவட மின் கேபிள்
![மாலை மலர் மாலை மலர்](/images/authorplaceholder.jpg?type=1&v=2)
- பிரகாஷ்குமார் எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார்
- புதைவட கேபிள்கள் மூலம் மின்சாரம் வழங்க சட்டமன்ற கூட்டத்தொடரில் கோரிக்கை வைத்தார்.
புதுச்சேரி:
முத்தியால்பேட்டை தொகுதி பெருமாள் கோவில் வீதி, டாக்டர் அம்பேத்கர் நகரில் வரை மின்சார விநியோகம் மின்கம்பங்கள் மூலம் கொடுக் கப்பட்டு வந்தது.
அந்தப் பகுதியில் மின்சார கம்பிகள் மிக தாழ்வாக செல்வதால் பொது மக்களுக்கு எந்த நேரமும் பாதிப்பு ஏற்படக்கூடும் என்பதை உணர்ந்த பிரகாஷ்குமார் எம்.எல்.ஏ., அப் பகுதிக்கு புதைவட கேபிள்கள் மூலம் மின்சாரம் வழங்க சட்டமன்ற கூட்டத்தொடரில் கோரிக்கை வைத்தார்.
தற்பொழுது டாக்டர் அம்பேத்கர் நகரில் உள்ள பிரதான வீதி மற்றும் குறுக்கு வீதிகளுக்கு ரூ.28 லட்சம் மதிப்பில் புதைவடகேபிள்கள் அமைக்கும் பணி நடைபெறுகிறது. இப்பணியை பிரகாஷ்குமார் எம்.எல்.ஏ. கலந்து கொண்டு தொடங்கி வைத்தார்.
இந்த நிகழ்ச்சியில் மின்துறை செயற்பொறியாளர் கனியமுதன், செயற்பொறி யாளர் கேபிள் பிரிவு செந்தில்குமார், உதவி பொறியாளர்கள் திலகராஜ், முருகசாமி, இளநிலை பொறியாளர்கள் குமார், லோகநாயகி பிகோத்தே மற்றும் அம்பேத்கர் நகர் பகுதி நிர்வாகிகளும் ஊர் பொதுமக்களும் கலந்து கொண்டனர்.