என் மலர்
புதுச்சேரி
சட்டமன்ற நில விவகாரம் குறித்து சி.பி.ஐ. விசாரணை
- சபாநாயகர் ஏம்பலம் செல்வம் அறிவிப்பு
- ரூ.9.50 லட்சம் வழக்கில் முன்னாள் முதல்-அமைச்சர் வைத்திலிங்கம் பல்டி அடித்த கதை புதுவை மக்களுக்கு நன்றாக தெரியும்.
புதுச்சேரி:
புதுவை சபாநாயகர் ஏம்பலம் செல்வம் நிருபர்களிடம் கூறியதாவது:-
முன்னாள் முதல்-அமைச்சர்கள் வைத்திலிங்கமும், நாராயணசாமியும் தொடர்ந்து பொய்களை கூறி வருகின்றனர். இதனால் புதுவை சட்டமன்றத்துக்கு நில ஆர்ஜிதம் செய்த நிலத்தை திருப்பி கொடுத்த விவகாரம் தொடர்பாக சிபிஐ விசாரணைக்கு வைத்திலிங்கம்
எம்.பி. வேண்டுகோளை ஏற்று நானே அனுப்பி வைக்கிறேன்.
எம்.எல்.ஏ.க்கள் விரும்பினால் இதை சட்டமன்றத்தில் விவாதிக்கவும் தயாராக உள்ளேன். என் மடியில் கனமில்லை, வழியில் எந்த பயமும் இல்லை. ஏற்கனவே ரூ.9.50 லட்சம் வழக்கில் முன்னாள் முதல்-அமைச்சர் வைத்திலிங்கம் பல்டி அடித்த கதை புதுவை மக்களுக்கு நன்றாக தெரியும். 9 ஆண்டாக ஆர்ஜிதம் செய்த நிலத்தை இழுத்தடித்து ஒப்படைத்தது ஏன்? என விசாரணை நடத்தும்படி சி.பி.ஐ.க்கு பரிந்துரை செய்ய உள்ளேன்.
2018-ல் அந்த நிலம் மீண்டும் உரியவர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. சி.பி.ஐ.க்கு அனுப்ப சட்டமன்ற செயலரிடம் மனு தயாரிக்க சொல்லியுள்ளேன். சட்டத்துறையுடன் ஆலோசனை நடத்தி விரைவில் மனுவை தயாரிப்பார்.
ஏற்கனவே நான் சட்டமன்றத்தில் கட்ட பஞ்சாயத்து செய்வோர் வரக்கூடாது என கூறியிருந்தேன். சமீபத்தில் எம்.எல்.ஏ.க்கள் ஒரு மனு அளித்தனர். அதனடிப்படையில் குற்றவாளிகளை சட்டசபைக்குள் அனுமதிக்க மாட்டோம்.
இவ்வாறு அவர் கூறினார்.