என் மலர்
புதுச்சேரி

நிகழ்ச்சியில் பாஸ்கர் எம்.எல்.ஏ, ஆணையர் ரமேஷ் பங்கேற்ற காட்சி.
மத்திய அரசு திட்ட விழிப்புணர்வு பிரசார நிறைவு விழா

- உழவர்கரை வட்டார வளர்ச்சி அதிகாரியும், நிகழ்ச்சியின் நோடல் அதிகாரியுமான ராதா கிருஷ்ணன் முன்னிலை வகித்தார்.
- 7 நாட்கள் நடந்த விழிப்புணர்வு யாத்திரை நிழச்சிக்கான ஏற்பாடுகளை கொம்யூன் பஞ்சாயத்து ஆணையர் ரமேஷ் செய்திருந்தார்.
புதுச்சேரி:
நமது லட்சியம் வளர்ச்சி அடைந்த பாரதம் என்ற தலைப்பில் மத்திய அரசின் திட்டங்களின் பயன்பாடுகளை பொது மக்களிடையே விழிப்பு ணர்வு ஏற்படுத்தும் விதமாக நாடு தழுவிய பிரச் சரம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இதன் பகுதியாக அரியாங்குப்பம் கொம்யூன் பஞ்சாயத்து சார்பில் அரியாங்குப்பம் மேற்கு பஞ்சாயத்தில் நேற்று நடந்த நிறைவு நாள் நிகழ்ச்சியில் அரியாங்குப்பம் தொகுதி எம்.எல்.ஏ. பாஸ்கர் தலைமை தாங்கினார். உழவர்கரை வட்டார வளர்ச்சி அதிகாரியும், நிகழ்ச்சியின் நோடல் அதிகாரியுமான ராதா கிருஷ்ணன் முன்னிலை வகித்தார்.
நிகழ்ச்சியில் மீன்வளத்துறை இயக்குனர் இஸ்மாயில், ஆதி திராவிட நலத்துறை இயக்குனர் இளங்கோவன், குடிமை பொருள் வழங்கல் துறை துணை தாசில்தார் ஐயனார் உள்ளிட்ட பல்வேறு துறை அதிகாரிகள், தலைவர்கள், பொதுமக்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
அரியாங்குப்பம் கொம்யூனில் 7 நாட்கள் நடந்த விழிப்புணர்வு யாத்திரை நிழச்சிக்கான ஏற்பாடுகளை கொம்யூன் பஞ்சாயத்து ஆணையர் ரமேஷ் செய்திருந்தார்.