என் மலர்
புதுச்சேரி
விபத்தில் கல்லூரி மாணவர் பலி
- இவர் மதகடிப்பட்டில் உள்ள தனியார் நர்சிங் கல்லூரியில் 2-ம் ஆண்டு படித்து வந்தார்.
- அதுபோல் தருண் வீட்டில் இருந்து மோட்டார் சைக்கிளில் கல்லூரிக்கு புறப்பட்டார்.
புதுச்சேரி:
வில்லியனூர் அருகே மூர்த்தி நகரை சேர்ந்தவர் முரளி. இவரது மகன் தருண் (வயது22). இவர் மதகடிப்பட்டில் உள்ள தனியார் நர்சிங் கல்லூரியில் 2-ம் ஆண்டு படித்து வந்தார்.
இவர் தினமும் மோட்டார் சைக்கிளில் கல்லூரிக்கு சென்று திரும்புவது வழக்கம். அதுபோல் தருண் வீட்டில் இருந்து மோட்டார் சைக்கிளில் கல்லூரிக்கு புறப்பட்டார்.
ஆரியப்பாளையம் மேம்பாலத்தை கடந்து மங்கலம் ரோடு சந்திப்பில் சென்ற போது தருண் ஓட்டிச்சென்ற மோட்டார் சைக்கிள் கட்டுப்பாட்டை இழந்து எதிரே மோட்டார் சைக்கிளில் வந்த வில்லியனூரை சேர்ந்த குலசேகரன் (60) என்பவர் மீது மோதி விட்டு பின்னர் அதன் பின்னால் மனைவி-மகளுடன் மோட்டார் சைக்கிளில் வந்த விழுப்புரம் ராம ரெட்டிக்குளம் விமல்(32) என்பவர் மீது மோதியது.
இதில் தூக்கி வீசப்பட்ட தருண் தலை, முகத்தில் படுகாயமடைந்து ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே இறந்து போனார். மற்ற 2 மோட்டார் சைக்கிள்களில் வந்த குலசேகரன், விமல் மற்றும் அவரது மகள் கவிதா(13) ஆகியோர் படுகாயமடைந்தனர். விமலின் மனைவிக்கு காயம் எதுவும் ஏற்படவில்லை. இதையடுத்து காயமடைந்த 3 பேரும்சிகிச்சைக்காக புதுவை அரசு ஆஸ்பத்திரி யில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த விபத்து குறித்து வில்லியனூர் போக்குவரத்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.