என் மலர்![tooltip icon](/images/info-tooltip.svg)
புதுச்சேரி
![கண்ணனின் மறைவால் காங்கிரசார் தவிக்கிறோம் கண்ணனின் மறைவால் காங்கிரசார் தவிக்கிறோம்](https://media.maalaimalar.com/h-upload/2023/12/02/1989626-kannan.webp)
புகழஞ்சலி கூட்டத்தில் தமிழக அரசின் மாநில சிறுபான்மையினர் நல ஆணைய தலைவர் பீட்டர் அல்போன்ஸ் பேசிய காட்சி.
கண்ணனின் மறைவால் காங்கிரசார் தவிக்கிறோம்
![மாலை மலர் மாலை மலர்](/images/authorplaceholder.jpg?type=1&v=2)
- பீட்டர் அல்போன்ஸ் புகழஞ்சலி
- கண்ணன் மறைவுக்கான இந்த கூட்டத்தில் பங்கேற்பது வேதனை தருகிறது.
புதுச்சேரி:
புதுவை முன்னாள் சபாநாயகர், அமைச்சர், எம்.பி. கண்ணன் கடந்த 5-ந் தேதி உடல்நலக்குறைவால் இறந்தார்.
அவருக்கு புதுவை இளைஞர் காங்கிரஸ் சார்பில் இன்று காலை 9 மணிக்கு ஓட்டல் சற்குருவில் புகழஞ்சலி கூட்டம் நடந்தது. கூட்டத்துக்கு அகில இந்திய காங்கிரஸ் ஒருங்கிணைப்பாளர் தேவதாஸ் தலைமை வகித்தார்.
தமிழக அரசின் மாநில சிறுபான்மையினர் நல ஆணைய தலைவர் பீட்டர் அல்போன்ஸ், கண்ணன் உருவப்படத்துக்கு மலரஞ்சலி செலுத்தி பேசினார். அவர் பேசியதாவது:-
நம்மை நேசித்தவர்களை இழந்து அவர்களின் நினைவஞ்சலி கூட்டத்தில் பங்கேற்பது போன்ற துரதிர்ஷ்டம் யாருக்கும் வரக் கூடாது. எனது அரை நூற்றாண்டு காலம் என்னால் அறியப்பட்ட கண்ணன் மறைவுக்கான இந்த கூட்டத்தில் பங்கேற்பது வேதனை தருகிறது.
கண்ணன் காங்கிரஸ் கட்சியை விட்டு வெளியே சென்றாலும், அவர் காங்கிரஸ்காரராகத்தான் இருந்தார். அவர் மறைவுக்கு பின் அவர் இருந்த இயக்கத்தினர் கண்டு கொள்ளவில்லை. ஆனால் நாம்தான் உறவை இழந்ததுபோல தவித்து, துடிக்கிறோம்.
காங்கிரசின் பாரம்பரி யத்தையும், பெருமையையும் இன்றைய இளைஞர்கள் தெரிந்து கொள்ளவில்லை. இதை காங்கிரசும் சொல்லிக் கொடுக்கவில்லை என்பது ஆதங்கமாகத்தான் உள்ளது. இவ்வாறு அவர் பேசினார்.
புதுவை மாநில காங்கிரஸ் தலைவர் வைத்திலிங்கம் எம்.பி., முன்னாள் முதல்- அமைச்சர் நாராயணசாமி, முன்னாள் மாநில தலைவர் ஏ.வி.சுப்பிரமணியன், சட்டமன்ற கட்சித்தலைவர் வைத்தியநாதன் எம்.எல்.ஏ., முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் மனோகர், விஜயவேணி, அகில இந்திய இளைஞர் காங்கிரஸ் செயலாளர் ஜோஸ்வா ஜெரார்டு மற்றும் நிர்வாகிகள் அஞ்சலி செலுத்தினர். கண்ணனின் மகன் விக்னேஷ் ஏற்புரையாற்றினார்.
நிகழ்ச்சி ஏற்பாடுகளை புதுவை மாநில இளைஞர் காங்கிரஸ் தலைவர் ஆனந்தபாபு நடராஜன் மற்றும் நிர்வாகிகள் செய்திருந்தனர்.