search icon
என் மலர்tooltip icon

    புதுச்சேரி

    வடிக்கால் வாய்க்கால் அமைக்கும் பணி-அங்காளன் எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார்
    X

    வடிக்கால் அமைக்கும் பணியை அங்காளன் எம்.எல்.ஏ. பூமி பூஜை செய்து தொடங்கி வைத்த காட்சி.

    வடிக்கால் வாய்க்கால் அமைக்கும் பணி-அங்காளன் எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார்

    • திருபுவனை தொகுதிக்குட்பட்ட கலிதீர்த்தாள் குப்பம் பொது சேவை மையம் அமைந்துள்ள பகுதிக்கு அருகில் சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன.
    • இதனால் உடனடியாக கழிவுநீர் வாய்க்கால் கட்டித் தருமாறு தொகுதி எம்.எல்.ஏ. அங்காளிடம் கோரிக்கை வைத்தனர்.

    புதுச்சேரி:

    திருபுவனை தொகுதிக்குட்பட்ட கலிதீர்த்தாள் குப்பம் பொது சேவை மையம் அமைந்துள்ள பகுதிக்கு அருகில் சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன.

    இந்த பகுதியில் வீடுகளில் இருந்து வெளியேற்றப்படும் கழிவு நீர் மற்றும் மழைக்காலங்க–ளில் தேங்கி நிற்கும் மழை நீர் ஆகியவை சாலையிலேயே நின்று பொது மக்களுக்கு பல்வேறு தொற்று நோய்கள் ஏற்படுத்தும் விதமாக இருந்தது.

    இதனால் உடனடியாக கழிவுநீர் வாய்க்கால் கட்டித் தருமாறு தொகுதி எம்.எல்.ஏ. அங்காளிடம் கோரிக்கை வைத்தனர். இதனையடுத்து பொதுப்பணித்துறை மூலம் 19.64 லட்சம் நிதி ஒதுக்கப்பட்டு அப் பகுதியில் யூ மற்றும் எல் வடிவிலான வடிகால் வாய்க்கால் அமைப்பதற்கு முடிவு செய்யப்பட்டது.

    அதற்கான பூமி பூஜை நடைபெற்றது. இதில் சிறப்பு அழைப்பாளராக எம்.எல்.ஏ. அங்காளன் கலந்து கொண்டு பூமி பூஜை யை தொடங்கி வைத்தார்.

    நிகழ்ச்சியில் பொதுப்பணித்துறை தலைமை பொறியாளர் சத்தியமூர்த்தி, கட்டிடங்கள் மற்றும் சாலைகள் (வடக்கு) கோட்ட செயற்பொறியாளர் சுந்தரராஜீ, உதவி பொறியாளர் சீனிவாச ராம், இளநிலை பொறியாளர் தமிழரசன் மற்றும்பொதுமக்கள் எம்.எல்.ஏ.வின் ஆதரவாளர்கள் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×