என் மலர்
புதுச்சேரி
கழிவு நீர் வாய்க்கால் அமைக்கும் பணி
- யூ வடிவ கழிவு நீர் வாய்க்கால் புதுவை ஸ்மார்ட் சிட்டி வளர்ச்சி திட்ட நிதியிலிருந்து சுமார் 98 லட்சம் மதிப்பில் கட்டுமான பணி புதுவை நகராட்சி மூலம் மேற்கொள்ளப்பட உள்ளது.
- பிரகாஷ்குமார் எம்.எல்.ஏ. அடிக்கல் நாட்டி புதிய கட்டுமான பணியை தொடங்கி வைத்தார்.
புதுச்சேரி:
முத்தியால்பேட்டை தொகுதிக்குட்பட்ட திருவள்ளுவர் நகர் கருவூலத்தில் இருந்து திருவள்ளுவர் நகர் வழியாக செல்லும் புதுவை நகராட்சிக்கு சொந்தமான யூ வடிவ கழிவு நீர் வாய்க்கால், சோலை நகர் வடக்கு மீனவர் பகுதி சிங்காரவேலர்சிலை அருகில் இருந்து கடலை நோக்கி செல்லும் நகராட்சி யூ வடிவ கழிவு நீர் வாய்க்கால் புதுவை ஸ்மார்ட் சிட்டி வளர்ச்சி திட்ட நிதியிலிருந்து சுமார் 98 லட்சம் மதிப்பில் கட்டுமான பணி புதுவை நகராட்சி மூலம் மேற்கொள்ளப்பட உள்ளது.
இதற்கான பூமி பூஜை நடைபெற்றது. பிரகாஷ்குமார் எம்.எல்.ஏ. அடிக்கல் நாட்டி புதிய கட்டுமான பணியை தொடங்கி வைத்தார்.
இந்த நிகழ்ச்சியில் கலெக்டர் மற்றும் உள்ளாட்சி துறை செயலர் வல்லவன் மற்றும் ஸ்மார்ட் சிட்டி வளர்ச்சி திட்ட தலைமை செயல் அதிகாரி அருண், உள்ளாட்சி துறை இயக்குனர் ரவி தீப் சிங் சஹார் மற்றும் புதுவை நகராட்சி ஆணையர் சிவக்குமார், செயற்பொறியாளர் சிவபாலன், உதவி பொறியாளர் பழனி ராஜா, இளநிலை பொறியாளர் சிவசுப்பிரமணியம் மற்றும் நகராட்சி ஊழியர்களும் எம்.எல்.ஏ. ஆதரவாளர்களும் கலந்து கொண்டனர்.