search icon
என் மலர்tooltip icon

    புதுச்சேரி

    ஐகோர்ட்டு தீர்ப்பால் ஜனநாயகம் காப்பாற்றப்பட்டுள்ளது-அன்பழகன் பேச்சு
    X

    ஆலோசனை கூட்டத்தில் அன்பழகன் பேசிய காட்சி.

    ஐகோர்ட்டு தீர்ப்பால் ஜனநாயகம் காப்பாற்றப்பட்டுள்ளது-அன்பழகன் பேச்சு

    • இந்திய ஜனநாயகம் காப்பற்றப்பட்டுள்ளது. தமிழகத்தில் நடப்பது மக்களாட்சியா? மன்னர் ஆட்சியா? என தெரியவில்லை.
    • எடப்பாடியார் தலைமையில் அமையும் கூட்டணி புதுவை உட்பட 40 தொகுதிகளிலும் மகத்தான வெற்றி பெறும்.

    புதுச்சேரி:

    புதுவை மாநில அதிமுக நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் உப்பளம் கட்சி அலுவலகத்தில் நடந்தது

    மாநில செயலாளர் அன்பழகன் தலைமை வகித்தார். அவைத் தலைவர் அன்பானந்தம், மாநில அம்மா பேரவை செயலாளர் பாஸ்கர் ஆகியோர் முன்னிலை வகித்தரன். கூட்டத்தில் அன்பழகன் பேசியதாவது:-

    பல்வேறு சட்ட போராட்டங்களுக்கு பிறகு அமலாக்கதுறை செந்தில் பாலாஜி மீது நடவடிக்கை எடுத்தது சரி என உயர்நீதி மன்றம் தீர்ப்பளித்துள்ளது.

    இதன்மூலம் இந்திய ஜனநாயகம் காப்பற்றப்பட்டுள்ளது. தமிழகத்தில் நடப்பது மக்களாட்சியா? மன்னர் ஆட்சியா? என தெரியவில்லை.

    இவர்களுக்கு வரும் பாராளுமன்ற தேர்தலில் மக்கள் சரியான பாடத்தை புகுந்துவார்கள். எடப்பாடியார் தலைமையில் அமையும் கூட்டணி புதுவை உட்பட 40 தொகுதிகளிலும் மகத்தான வெற்றி பெறும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    கூட்டத்தில் மாநில இணை செயலாளர் கணேசன், துணை தலைவர் ராஜாராமன், மாநில பொருளாளர் ரவிபாண்டுரங்கன், நகர செயலாளர் அன்பழகன் உடையார், துணைச் செயலாளர்கள் நாகமணி, கிருஷ்ணமூர்த்தி, காந்தி, மாநில மாநில அண்ணா தொழிற்சங்க பேரவை செயலர் பாப்புசாமி, மாநில அமைப்பு சாரா ஓட்டுநர்கள் அணிச் செயலாளர் செல்வம், நகர தலைவர்கள் செல்வகுமார், சிவா, கணேஷ், தொகுதி செயலா ளர்கள் பொன்னுசாமி, பாஸ்கர், கருணாநிதி, ராஜா, சிவகுமார், ஆறுமுகம், கிருஷ்ணன், கமல்தாஸ், வேலவன், கோபால், குணசேகரன், சண்முகதாஸ், மாநில எம்.ஜி.ஆர். மன்ற தலைவர் மோகன்தாஸ் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

    Next Story
    ×