search icon
என் மலர்tooltip icon

    புதுச்சேரி

    டிஜிட்டல் வங்கி கிளை-செல்வகணபதி எம்.பி. திறந்து வைத்தார்
    X

    டிஜிட்டல் வங்கி கிளையை செல்வகணபதி எம்.பி. ரிப்பன் வெட்டி திறந்து வைத்த காட்சி.

    டிஜிட்டல் வங்கி கிளை-செல்வகணபதி எம்.பி. திறந்து வைத்தார்

    • இந்திய சுதந்திர தினத்தின் 75-வது ஆண்டு நினைவாக, மத்திய அரசு பல்வேறு மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 75 மாவட்டங்களில் 75 டிஜிட்டல் வங்கி கிளைகளை திறந்துள்ளது.
    • பிரதமர் மோடி காணொலிக் காட்சி மூலம் இந்தியாவில் உள்ள 75 கிளையும் திறந்து வைத்தார்.

    புதுச்சேரி:

    இந்திய சுதந்திர தினத்தின் 75-வது ஆண்டு நினைவாக, மத்திய அரசு பல்வேறு மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 75 மாவட்டங்களில் 75 டிஜிட்டல் வங்கி கிளைகளை திறந்துள்ளது.

    புதுவை யூனியன் பிரதேசத்திற்கு 2 கிளைகளை அரசு ஒதுக்கியுள்ளது. அதில் ஒன்று புதுவையிலும் மற்றொன்று காரைக்கால் மாவட்டத்திற்கும் ஒதுக்கப்பட்டுள்ளது.

    புதுவையில் ஐ.சி.ஐ.சி.ஐ. வங்கிக்கு ஒரு கிளையும் காரைக்கால் மாவட்டத்தில் உள்ள இந்தியன் வங்கிக்கு மற்றொரு கிளையும் ஒதுக்கப்பட்டுள்ளன. பிரதமர் மோடி காணொலிக் காட்சி மூலம் இந்தியாவில் உள்ள 75 கிளையும் திறந்து வைத்தார்.

    புதுவை புஸ்சி வீதியில் அமைந்துள்ள ஐ.சி.ஐ.சி.ஐ. வங்கிகிளையின் தொடக்க விழாவில் செல்வகணபதி எம்.பி. பங்கேற்று டிஜிட்டல் வங்கி கிளையை திறந்து வைத்தார்.

    அவர் பேசும் போது, புதுவையின் வளர்ச்சிக்கு டிஜிட்டல் வங்கி கிளை திறப்பு ஒரு உண்மையான வரப்பிரசாதம்.

    இதன் மூலம் சேமிப்புக் கணக்குகளைத் திறப்பது, இருப்புச் சரிபார்ப்பு, வங்கிக் கணக்குகளை அச்சிடுதல், நிதி பரிமாற்றம், நிலையான வைப்புத்தொகையில் முதலீடு, கடன் விண்ணப்பங்கள், வழங்கப்பட்ட காசோலைகளுக்கான பணபரிமாற்றம் நிறுத்தம், கிரெடிட் மற்றும் டெபிட் கார்டுகளுக்கான விண்ணப்பங்கள், வரி மற்றும் பில் செலுத்துதல் போன்றவற்றை இந்த டிஜிட்டல் வங்கி கிளை எளிதாக்கும்.

    பரிந்துரை வசதிகள் போன்றவை டிஜிட்டல் வடிவில் செய்யப்படுகின்றன. டிஜிட்டல் அனுபவத்தைப் பெறுவதற்கு வங்கி வாடிக்கையாளர்களுக்கு பெரிதும் உதவியாக இருக்கும் என்று கூறினார். இந்நிகழ்ச்சியில் வங்கி அதிகாரிகள் மற்றும் வாடிக்கையாளர்கள் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×