search icon
என் மலர்tooltip icon

    புதுச்சேரி

    வீடு, வீடாக சென்று குப்பைகள் சேகரிக்கும் பணி-சபாநாயகர் ஏம்பலம் செல்வம் தொடங்கி வைத்தார்
    X

    வீடு, வீடாக குப்பைகள் சேகரிக்கும் திட்டத்தை சபாநாயகர் ஏம்பலம் செல்வம் பாஸ்கர் எம்.எல்.ஏ. ஆகியோர் தொடங்கி வைத்த காட்சி.

    வீடு, வீடாக சென்று குப்பைகள் சேகரிக்கும் பணி-சபாநாயகர் ஏம்பலம் செல்வம் தொடங்கி வைத்தார்

    • வீடு தோறும் சென்று குப்பைகள் சேகரிக்கும் திட்டமானது தற்போது கொம்யூன் பஞ்சாயத்துகளுக்கும் விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளது.
    • இந்த நிகழ்ச்சியில் சபாநாயகர் ஏம்பலம் செல்வம் தலைமை விருந்தினராகவும் கலந்து கொண்டு திட்டத்தினை தொடங்கி வைத்தனர்.

    புதுச்சேரி:

    பிரதமர் மோடியின் தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் புதுவை மாநிலத்தில் நகராட்சிகளில் இயங்கி வந்த வீடு தோறும் சென்று குப்பைகள் சேகரிக்கும் திட்டமானது தற்போது கொம்யூன் பஞ்சாயத்துகளுக்கும் விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளது.

    அதன்படி முதன் முதலில் அரியாங்குப்பம் கொம்யூன் பஞ்சாயத்துக்கு உட்பட்ட பகுதிகளில் ஹெச்.ஆர்.ஸ்கொயர் நிறுவனம் சார்பாக வீடு தோறும் சென்று குப்பைகள் சேகரிக்கும் பணி தொடக்க விழா அரியாங்குப்பம் காமராஜர் திருமண நிலையத்தில் நடைபெற்றது.

    இந்த நிகழ்ச்சியில் சபாநாயகர் ஏம்பலம் செல்வம் தலைமை விருந்தினராகவும் எம்.எல்.ஏ. பாஸ்கர் என்கிற தட்சிணாமூர்த்தி சிறப்பு விருந்தினராகவும் கலந்து கொண்டு திட்டத்தினை தொடங்கி வைத்தனர்.

    இந்த நிகழ்ச்சியில் உள்ளாட்சித் துறை துணை இயக்குனர்கள் கார்த்திக், சிவகுமார் அரியாங்குப்பம் கொம்யூன் பஞ்சாயத்து ஆணையர் ரமேஷ், ஹெச்.ஆர்.ஸ்கொயர் நிறுவனத்தின் வேளாண் இயக்குனர் விஜயகுமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×