என் மலர்![tooltip icon](/images/info-tooltip.svg)
புதுச்சேரி
![சாலையில் கொட்டப்படும் குப்பைகள்-பொதுமக்கள் அவதி சாலையில் கொட்டப்படும் குப்பைகள்-பொதுமக்கள் அவதி](https://media.maalaimalar.com/h-upload/2022/10/29/1783380-img-20221028-wa0273.jpg)
சாலையில் கொட்டப்பட்ட குப்பைகள்
சாலையில் கொட்டப்படும் குப்பைகள்-பொதுமக்கள் அவதி
![மாலை மலர் மாலை மலர்](/images/authorplaceholder.jpg?type=1&v=2)
- மதகடிப்பட்டு அருகே உள்ள திருபுவனை களத்து மேட்டு தெருவில் பொதுமக்கள் தங்கள் வீடுகளில் இருந்து குப்பைகளை எடுத்து வந்து சாலையில் நடுவே கொட்டி விட்டு செல்கின்றனர்.
- பல்வேறு தொற்று நோய்கள் ஏற்படும் சூழலும் ஏற்பட்டுள்ளது.
புதுச்சேரி:
மதகடிப்பட்டு அருகே உள்ள திருபுவனை களத்து மேட்டு தெருவில் பொதுமக்கள் தங்கள் வீடுகளில் இருந்து குப்பைகளை எடுத்து வந்து சாலையில் நடுவே கொட்டி விட்டு செல்கின்றனர்.
இந்த சாலையை விவசாய நிலத்திற்கு செல்லும் வழியாகவும் பல்வேறு செயல்பாட்டுக்கு இந்த வழியை பொதுமக்கள் பயன்படுத்தி வருகின்றனர். தற்பொழுது சாலை நடுவே நீண்ட தூரம் குப்பைகள் கொட்டப்பட்டு துர்நாற்றம் வீசி வருகிறது.
மேலும் தற்போது மழைக்காலம் என்பதால் மழை பெய்து குப்பையில் இருந்து பூழுக்கள் மற்றும் பூச்சிகள் உற்பத்தியாகும் சூழ்நிலை உள்ளது.
பல்வேறு தொற்று நோய்கள் ஏற்படும் சூழலும் ஏற்பட்டுள்ளது. இதனால் அவ்வழியாக செல்லும் பொதுமக்கள் அவதிக்கு உள்ளாகி உள்ளனர். சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் அப்பகுதிக்கு சென்று குப்பையை அகற்ற நடவடிக்கை எடுக்குமாறு அரசுக்கு பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.