என் மலர்
புதுச்சேரி
புதுவையில் பாலின வள மையம்-ஜனாதிபதி தொடங்கி வைக்கிறார்
- மத்திய அரசின் கீழ் இயங்கும் தேசிய ஊரக வாழ்வாதாரதிட்டத்தின் வழிகாட்டுதல்படி பெண்கள் மற்றும் பெண் குழந்தைகளுக்கு எதிரான வன்முறை ஒழிப்பு சர்வதேச தினம் ஆண்டுதோறும் நவம்பர் 25-ந் தேதி கொண்டாடப்படுகிறது.
- இதற்காக நவம்பர் 25 முதல் டிசம்பர் 23 வரை4 வாரங்களுக்கு தீவிர பிரசாரங்களை மாநில ஊரக வாழ்வாதார இயக்கமானது நடைமுறைப்படுத்த உள்ளது.
புதுச்சேரி:
புதுவை குடிமைப்பொருள் வழங்கல்துறை அமைச்சர் சாய்.ஜெ.சரவணன் குமார் நிருபர்களிடம் கூறியதாவது:-
மத்திய அரசின் கீழ் இயங்கும் தேசிய ஊரக வாழ்வாதாரதிட்டத்தின் வழிகாட்டுதல்படி பெண்கள் மற்றும் பெண் குழந்தைகளுக்கு எதிரான வன்முறை ஒழிப்பு சர்வதேச தினம் ஆண்டுதோறும் நவம்பர் 25-ந் தேதி கொண்டாடப்படுகிறது.
இந்த தினத்தில் புதுவையில் மாநில ஊரக வாழ்வாதார இயக்கத்தின் கீழ் உள்ள அரியாங்குப்பம், வில்லியனூர், காரைக்கால் வட்டாரங்களில் 3-ம் பாலின வள மையங்களை ஜனாதிபதி திரவுபதி முர்மு விடியோ கான்பிரன்சிங் மூலம் தொடங்கி வைக்கிறார்.
இதற்காக நவம்பர் 25 முதல் டிசம்பர் 23 வரை4 வாரங்களுக்கு தீவிர பிரசாரங்களை மாநில ஊரக வாழ்வாதார இயக்கமானது நடைமுறைப்படுத்த உள்ளது.மகளிர் குழந்தைகளுக்கு எதிரான வன்கொடுமைகள் தொடர்பாக விழிப்புணர்வு ஏற்படுத்துவோம்.
பெண்கள் புகார் செய்யும் வசதி அனைத்து அரசு அலுவலகங்களிலும் இருப்பது உறுதிப்படுத்தப்படும்.
இவ்வாறு சாய்.ஜெ.சரவணன்குமார் கூறினார்.