search icon
என் மலர்tooltip icon

    புதுச்சேரி

    மணக்குள விநாயகர் கோவிலில் தங்க தேர்இழுத்து வழிபாடு
    X

    மணக்குள விநாயகர் கோவிலில் அமைச்சர் லட்சுமி நாராயணன் தலைமையில் தங்க தேர்இழுத்து வழிபாடு செய்த காட்சி.

    மணக்குள விநாயகர் கோவிலில் தங்க தேர்இழுத்து வழிபாடு

    • அமைச்சர் லட்சுமி நாராயணன் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கினார்
    • காமராஜர் திருமண மண்டபத்தில் நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

    புதுச்சேரி:

    புதுவை முதல்-அமைச்சர் ரங்கசாமியின் பிறந்தநாளை பொதுப்பணித்துறை அமைச்சர் லட்சுமி நாராயணன் தலைமையில் என்ஆர்.காங்கிரசார் உற்சா கமாக கொண்டாடினர்.

    காலை 8.30 மணிக்கு மணக்குள விநாயகர் கோவிலில் அமைச்சர் லட்சுமிநாராயணன், ராஜ்பவன் தொகுதி பிரமுகர்கள் தங்கத்தேர் இழுத்து ரங்கசாமி நீண்டகாலம் வாழ பிரார்த்தனை செய்தனர். தொடர்ந்து 9.45 மணிக்கு முதல்-அமைச்சர் வீட்டுக்கு சென்ற அமைச்சர் லட்சுமிநாராயணன், முதல்-அமைச்சருக்கு சால்வை, பூங்கொத்து அளித்து பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்தார்.

    தொடர்ந்து குமரகுரு பள்ளத்தில் ஆனந்து தலைமையில் நலத்திட்ட உதவிகளை அமைச்சர் வழங்கினார். 11.30 மணிக்கு ஒஸ்பிஸ் மடத்தில் முதியோருக்கு அமைச்சர் உணவளித்தார்.

    தொடர்ந்து மதியம் 12 மணிக்கு மணக்குள விநாயகர் கோவிலில் பொதுமக்களுக்கு அமைச்சர் லட்சுமிநாராயணன் அன்னதானம் வழங்கினார். இதன்பின் வேதபுரீஸ்வரர் ஆலயத்தில் அன்னதானம் வழங்கினார்.

    மதியம் 12.45 மணிக்கு அரியாங்குப்பம் எம்.எல்.ஏ. பாஸ்கர் முன்னிலையில் காமராஜர் திருமண மண்டபத்தில் நலத்திட்ட உதவிகளை அமைச்சர் லட்சுமி நாராயணன் வழங்கினார்.

    தொடர்ந்து மதியம் 1.15 மணிக்கு கணேஷ்நகரில் அமைச்சர் பொது மக்களுக்கு அன்னதானம் வழங்கினார்.

    Next Story
    ×