என் மலர்
புதுச்சேரி
தனியார் கல்லூரிகளுக்கு ஆதரவாக அரசு செயல்படுகிறது
- பிளஸ்-2 மாணவர்களுக்கான பொதுத்தேர்வு முடிவுகள் வெளியாகி ஒருவார காலம் ஆகிறது.
- மாணவர் சேர்க்கை குறித்து அரசிடமிருந்து எந்த அறிவிப்பும் வரவில்லை.
புதுச்சேரி:
இந்திய மாணவர் சங்கம் தலைவர் ஜெயப்பிரகாஷ் செயலாளர்-ரவீன் குமார் ஆகியோர் கூட்டாக வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
பிளஸ்-2 மாணவர்க ளுக்கான பொதுத்தேர்வு முடிவுகள் வெளியாகி ஒருவார காலம் ஆகிறது. ஆனால் தற்போது வரை இளங்கலை படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை குறித்து அரசிடமிருந்து எந்த அறிவிப்பும் வரவில்லை. ஒவ்வொரு ஆண்டும் சரியான திட்டமிடல் இல்லா மல் மாணவர் சேர்க்கையில் பல குழப்பங்களை ஏற்படுத்தி, மாணவர்களையும் பெற்றோர்களையும் மன உளைச்சலுக்கு ஆளாக்கி, தனியார் கல்லூரி களை நோக்கி செல்ல வைக்க கூடிய வேலை என்பதை அரசே செய்து வருவதை பார்க்க முடிகிறது. இது அரசின் தனியார் கல்வி வியாபாரிகள் மீது கொண்டுள்ள அதீத பாசத்தை வெளிப்படுத்துகிறது.
அந்த வகையில் இந்த ஆண்டும் தனியார் கல்வி நிறுவனங்கள் போட்டி போட்டுக் கொண்டு மாணவர் சேர்க்கையை தொடங்கியுள்ளனர். மேலும் அரசிடமிருந்து எந்த அறிவிப்பும் வராததால் பல பெற்றோர்கள் தங்களது குழந்தைகளுக்கு அரசு கல்லூரிகளில் இடம் கிடைக்குமா கிடைக்காதா என்ற குழப்பத்தில் தங்களது குழந்தைகளை தனியார் கல்லூரிகளில் அதிக பணம் கட்டி மாணவர்களை சேர்த்து விடுகின்றனர்.
ஆனால் பின்னர் பணம் கட்ட முடியாமல் பல மாண வர்கள் கல்வியை தொடர முடியாமல் இடைநிற்றல் என்பதும் சமீபத்திய காலத்தில் அதிகரித்து வருகிறது. மேலும் முதலாம் ஆண்டு மாணவர் சேர்க்கையை கல்வி ஆண்டின் இறுதி நேரத்தில் சேர்க்கையை அரசு முடிப்ப தால் பேராசிரி யர்களாலும் பாடத்தை முடிக்க முடியா மல் குறுகிய காலத்தில் மாணவர்கள் பருவத் தேர்வை எதிர்கொள்வதால், பல மாணவர்களால் தேர்ச்சியடைய முடியாத சூழல் நிலவி வருகிறது.
அதே போக்கை அரசு இந்த ஆண்டும் மேற்கொள் வதை அரசே ஏழை எளிய மாணவர்களின் உயர் கல்வியை சிதைத்து கல்வி உரிமையை பறிக்கும் செயலாக இந்திய மாணவர் சங்கம் பார்க்கிறது. மேலும் இந்த போக்கினை இந்திய மாணவர் சங்கம் புதுவை மாநில குழு வன்மையாக கண்டிக்கிறது.
ஆகவே புதுவை அரசும் உயர்கல்வித்துறையும் உடனடியாக சரியான திட்ட மிடலுடன் மாணவர் சேர்க்கையை விரைந்து தொடங்கி காலத்தோடு முடிக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறியுள்ளனர்.