search icon
என் மலர்tooltip icon

    புதுச்சேரி

    தவறான மது கொள்கையால் அரசின் வருமானம் வீணடிப்பு-அன்பழகன் பேட்டி
    X

    கோப்பு படம்.

    தவறான மது கொள்கையால் அரசின் வருமானம் வீணடிப்பு-அன்பழகன் பேட்டி

    • ரெஸ்டோபார் என்று சொல்லி பொதுமக்களுக்கு தொல்லையும், கலாச்சார சீரழிவையும் ஏற்படுத்தி வருகின்றனர்.
    • டூரிஸ்ட் லைசன்ஸ் என்ற பெயரில் கடந்த தி.மு.க. காங்கிரஸ் ஆட்சியில் 55 லைசன்சும் தற்போதைய அரசில் சுமார் 95 லைசன்சும் வழங்கப்பட்டுள்ளது.

    புதுச்சேரி:

    புதுவை மாநில அ.தி.மு.க. செயலாளர் அன்பழகன் நிருபர்களிடம் கூறியதாவது:-

    புதுவையில் இயங்கும் 8 மது ஆலையில் உற்பத்தி செய்யும் மதுவையும், வெளிமாநிலங்களில் இருந்து வரும் 800-க்கும் மேற்பட்ட பிராண்டு வகைகளையும் அரசே கொள்முதல் செய்து அதற்காக தனி கார்பரேஷன் அமைத்து சில்லரை கடைகளுக்கு விநியோகம் செய்தால் ரூ.1000 கோடிக்கு மேல் வருவாய் கிடைக்கும்.

    1989-ம் ஆண்டு பிறகு எந்த தனியாருக்கும் சில்லரை மது விற்பனைக்கு அனுமதி வழங்கப்படவில்லை. டூரிஸ்ட் லைசன்ஸ் என்ற பெயரில் கடந்த தி.மு.க. காங்கிரஸ் ஆட்சியில் 55 லைசன்சும் தற்போதைய அரசில் சுமார் 95 லைசன்சும் வழங்கப்பட்டுள்ளது.

    இந்த டூரிஸ்ட் லைசன்ஸ் பெற 15 ஏ.சி. ரூம் மற்றும் 300 சதுர அடி ஹால் ஆகியவை இருக்க வேண்டும். ஆனால் தற்போது இதுபோன்ற வசதிகள் இல்லாதவ ர்களுக்கும் டூரிஸ்ட் லைசன்ஸ் வழங்கப்பட்டுள்ளது. இதை தான் ரெஸ்டோபார் என்று சொல்லி பொதுமக்களுக்கு தொல்லையும், கலாச்சார சீரழிவையும் ஏற்படுத்தி வருகின்றனர்.

    ரெஸ்டோ பார் என்ற பெயரில் இதுவரை லைசன்ஸ் வழங்காத சூழ்நிலையில் அதனை மக்களிடம் கலால்துறை தெளிவுபடுத்தவில்லை.புதியதாக 100 சில்லரை லைசன்சுகளை ஏலம் விட்டால் குறைந்த்து ஆண்டுக்கு ரூ.200 கோடிக்கு மேல் வருவாய் வரும் அதையும் அரசு செய்யவில்லை.

    கள்ளுக்கடை, சாராயக்கடை ஏலம் விடுவது போன்று மதுபான விற்பனை உரிமத்தையும் 5 ஆண்டுக்கு ஒருமுறை ஏலம் விட்டால் தற்போது உள்ளதை விட பல மடங்கு வருவாய் வரும். அதையும் அரசு செய்யவில்லை.

    மக்களுக்கு தொல்லை கொடுக்கும் டூரிஸ்ட் பாரை ரத்து செய்துவிட்டு சில்லறை மது பார் அனுமதி வழங்கலாம் முதல்-அமைச்சரிடம் துறையின் அதிகாரிகள் சரியான விபரத்தை எடுத்துக் கூறாததால் அரசின் வருமானம் வீணடிக்கப்பட்டு வருகிறது.

    கலால்துறை சார்பில் பீர் பஸ்சுக்கு அனுமதி கொடுக்கபப்பட்டுள்ளதா.? யார் கொடுத்தது. இதுகுறித்து அரசும், கலால் துறையும் உரிய விளக்கம் தெரிவிக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    Next Story
    ×