என் மலர்
புதுச்சேரி
சாரதா கங்காதரன் கல்லூரியில் பட்டமளிப்பு விழா
- சிறப்பு விருந்தினராக கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் மாணவ-மாணவிகளுக்கு பட்டங்களை வழங்கி பேசினாா்.
- கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் பங்கேற்பு
புதுச்சேரி:
புதுவை சாரதா கங்காதரன் கல்லூரியின் பட்டமளிப்பு விழா கல்லூரி வளாகத்தில் நடந்தது.
விழாவுக்கு கல்லூரியின் தலைவர் சுவாமிநாதன் தலைமை தாங்கினார். துணை தலைவர் பழனிராஜா முன்னிலை வகித்தார். சிறப்பு விருந்தினராக கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் மாணவ-மாணவிகளுக்கு பட்டங்களை வழங்கி பேசினாா்.
விழாவில் அமைச்சர் நமச்சிவாயம், சம்பத் எம்.எல்.ஏ., உயர் தொழில்நுட்பகல்வி இயக்குனரகத்தின் இயக்குனர் அமன் சர்மா ஆகியோர் கலந்துகொண்டனர்.
பட்டமளிப்பு விழாவில் 2019-ம் ஆண்டு தே ர்ச்சி பெற்ற 361 இளங்கலை மற்றும் முதுகலை மாணவ-மாணவிகளும், 2020-ம் ஆண்டு தேர்ச்சி பெற்ற 471 இளங்கலை மற்றும் முதுகலை மாணவ-மாணவிகளுக்கும் பட்டங்கள் வழங்கப்பட்டன.
புதுவை பல்கலைக்கழக அளவில் தேர்வில் முதலிடம் பெற்று தங்க பதக்கம் வென்ற 8 மாணவர்களும், கல்லூரி அளவில் முதலிடம் பிடித்த 23 மாணவர்களும் கவுரவிக்கப்பட்டனர். முன்னதாக கல்லூரி முதல்வர் உதய சூரியன் வரவேற்றார். விழாவில் மாணவ-மாணவிகள், பெற்றோர் மற்றும் கல்லூரி பேராசிரியர்கள், ஊழியர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.