என் மலர்
புதுச்சேரி
விநாயகா மிஷன் அலைடு ஹெல்த் சயின்ஸ் கல்லூரியில் பட்டமளிப்பு விழா
- அலைடு ஹெல்த் சயின்ஸ் துறை டீன் செந்தில்குமார் தலைமை தாங்கி, சிறப்பு விருந்தினர்களுக்கு நினைவு பரிசு வழங்கி கவுரவித்தார்.
- விழாவிற்கான ஏற்பாடு களை நிர்வாக அதிகாரி சந் துரு, கல்லூரி பேராசிரியர்கள், மாணவ, மாணவிகள் செய்திருந்தனர்.
புதுச்சேரி:
கிருமாம்பாக்கம் ஆறுபடை வீடு மருத்துவக்கல்லூரி வளாகத்தில் அமைந்துள்ள விநாயகா மிஷன் அலைடு ஹெல்த் சயின்ஸ் கல்லூரி மாணவர்களுக்கான பட்டமளிப்பு விழா பெரிய காட்டுப் பாளையம் ஜனனி திருமண மண்டபத்தில் நடைபெற்றது.
விழாவிற்கு அலைடு ஹெல்த் சயின்ஸ் துறை டீன் செந்தில்குமார் தலைமை தாங்கி, சிறப்பு விருந்தினர்களுக்கு நினைவு பரிசு வழங்கி கவுரவித்தார்.
புதுச்சேரி பிரிவு கல்லூரி இயக்குனர் ஆன்ட்ரூ ஜான் வரவேற்றார். தமிழ்நாடு மாநில காசநோய் பிரிவு கூடுதல் இயக்குனர் மற்றும்
மருத்துவ கிராமப்புறசுகாதார சேவை அதிகாரி ஆஷா பெட்ரிக் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு 250 மாணவ, மாணவிகளுக்கு பட்டங்களை வழங்கினார்.
விநாயக மிஷன் ரிசர்ச் பவுண்டேஷன் ஐ.கியூ.எ.சி.அமைப்பின் இயக்குனர் ஞானசேகர் வாழ்த்துரை வழங்கினார்.
தொடர்ந்து துறை வாரியாக பல்கலைக்கழக அளவில் முதலிடம் பெற்றவர்களுக்கு 2 தங்கம், 3 வெள்ளி, 2 வெண்கலப் பதக்கம் வழங்கப்பட்டன.
முடிவில் ஒருங்கிணைப்பாளர் வளர்மதி நன்றி கூறினார்.
விழாவிற்கான ஏற்பாடு களை நிர்வாக அதிகாரி சந் துரு, கல்லூரி பேராசிரியர்கள், மாணவ, மாணவிகள் செய்திருந்தனர்.