என் மலர்![tooltip icon](/images/info-tooltip.svg)
புதுச்சேரி
![வீடுகட்ட மானிய தொகை-பிரகாஷ்குமார் எம்.எல்.ஏ. வழங்கினார் வீடுகட்ட மானிய தொகை-பிரகாஷ்குமார் எம்.எல்.ஏ. வழங்கினார்](https://media.maalaimalar.com/h-upload/2022/11/03/1785923-img-20221103-wa0001.jpg)
X
பயனாளிகளுக்கு மானிய ெதாகை வழங்கிய காட்சி.
வீடுகட்ட மானிய தொகை-பிரகாஷ்குமார் எம்.எல்.ஏ. வழங்கினார்
By
மாலை மலர்3 Nov 2022 11:25 AM IST
![மாலை மலர் மாலை மலர்](/images/authorplaceholder.jpg?type=1&v=2)
- புதுவை குடிசை மாற்று வாரியம் சார்பில் பிரதம மந்திரி வீடு கட்டும் திட்டத்தின் கீழ் முத்தியால் பேட்டை தொகுதியை சேர்ந்த 5 பயனாளிகளுக்கு ரூ.6 லட்சத்து 80 ஆயிரத்துக்கான மானிய தொகையை வங்கி கணக்குகளில் செலுத்தும் ஆணை வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.
- நிகழ்ச்சியில் குடிசை மாற்று வாரிய இளநிலை பொறியாளர் சத்தியவாணி, வருவாய் ஆய்வாளர் தணிகாசலம் ஆகியோர் உடனிருந்தனர்.
புதுச்சேரி:
புதுவை குடிசை மாற்று வாரியம் சார்பில் பிரதம மந்திரி வீடு கட்டும் திட்டத்தின் கீழ் முத்தியால் பேட்டை தொகுதியை சேர்ந்த 5
பயனாளிகளுக்கு ரூ.6 லட்சத்து 80 ஆயிரத்துக்கான மானிய தொகையை வங்கி கணக்குகளில் செலுத்தும் ஆணை வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. முத்தியால்பேட்டை சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் நடந்த நிகழ்ச்சியில் பிரகாஷ் எம்.எல்.ஏ. பயனாளிகளுக்கு மானியத்துக்கான ஆணையை வழங்கினார்.
நிகழ்ச்சியில் குடிசை மாற்று வாரிய இளநிலை பொறியாளர் சத்தியவாணி, வருவாய் ஆய்வாளர் தணிகாசலம் ஆகியோர் உடனிருந்தனர்.
Next Story
×
X