என் மலர்
புதுச்சேரி

மணக்குள விநாயகர் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜியில் பி.டெக் வகுப்புகள் தொடக்க விழா நடைபெற்ற போது எடுத்த காட்சி.
மணக்குள விநாயகர் கல்லூரியில் பி.டெக் வகுப்புகள் தொடக்க விழா

- புதுவை கலிதீர்த்தாள்குப்பம், மணக்குள விநாயகர் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜியில் பி.டெக் மாணவர்களின் 14-வது ஆண்டு தொடக்க விழா நடைபெற்றது.
- சிறப்பு கவுரவ விருந்தினராக தொழில் ஆலோசகர் ஜெயபிரகாஷ் காந்தி, தலைமை விருந்தினராக காங்னிசென்ட் துணைத் தலைவர் ஸ்ரீராம் வேம்பு ஆகியோர் கலந்து கொண்டனர்.
புதுச்சேரி:
புதுவை கலிதீர்த்தாள்குப்பம், மணக்குள விநாயகர் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜியில் பி.டெக் மாணவர்களின் 14-வது ஆண்டு தொடக்க விழா நடைபெற்றது.
விழாவுக்கு கல்லூரி தலைவரும் நிர்வாக இயக்குனருமான தனசேகரன் தலைமை தாங்கினார். துணை தலைவர் சுகுமாறன், செயலாளர் டாக்டர் நாராயணசாமி கேசவன் ஆகியோர் கலந்து கொண்டு வாழ்த்துரை வழங்கினார்கள்.
சிறப்பு கவுரவ விருந்தினராக தொழில் ஆலோசகர் ஜெயபிரகாஷ் காந்தி, தலைமை விருந்தினராக காங்னிசென்ட் துணைத் தலைவர் ஸ்ரீராம் வேம்பு ஆகியோர் கலந்து கொண்டனர். கல்லூரி முதல்வர் மலர்க்கண் வரவேற்று பேசினார்.
இவ்விழாவில் சிறப்பாக பணியாற்றிய ஆசிரியர்கள் மற்றும் கல்லூரியின் முன்னாள் மாணவர்களுக்கு விருதுகள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கபட்டது. இதில் மணக்குள விநாயகர் பொறியியல் கல்லூரி முதல்வர் வி.கே.எஸ் வெங்கடாசலபதி, மைலம் பொறியியல் கல்லூரி இயக்குனர் மற்றும் தக்ஷஷிலா பல்கலைக்கழகம் பதிவாளர் மற்றும் இயக்குனர் டாக்டர் செந்தில் மற்றும் கல்லூரி துறை தலைவர்கள், பேராசிரியர்கள், பெற்றோர்கள், மாணவர்கள் கலந்து ெகாண்டனர்.
இந்நிகழ்ச்சி ஏற்பாடுகளை கல்லூரி பேராசிரியர்கள் சிறப்பாக செய்திருந்தனர்.