என் மலர்![tooltip icon](/images/info-tooltip.svg)
புதுச்சேரி
![சத்ரிய சேவா சங்க தொடக்க விழா சத்ரிய சேவா சங்க தொடக்க விழா](https://media.maalaimalar.com/h-upload/2022/10/06/1772501-sevagam.jpg)
பூரணாங்குப்பத்தில் சத்ரிய சேவா சங்க தொடக்க விழா நடந்த போது எடுத்த படம்.
சத்ரிய சேவா சங்க தொடக்க விழா
![மாலை மலர் மாலை மலர்](/images/authorplaceholder.jpg?type=1&v=2)
- புதுவையை அடுத்த பூரணாங்குப்பம் ஜோதி சிலம் பம் சத்ரிய குருகுலம், சத்ரிய சேனா சங்கம் சார்பில் சத்ரியர் மற்றும் சத்திரியாஸ் எனும் கர்லாகட்டை மூலம் மெய்பாடம் பயிற்சி அளிக்கப்பட்டது.
- விழாவில் சமூக ஆர்வலர் ஆனந்தன், தேசிய தொழிற்சங்க தலைவர் கந்தசாமி, சேவா சங்க துணை தலைவர்கள் பயில்வான் பெரியசாமி, முருகன், இணை செயலாளர் திருவேங்கடம், பொருளாளர் சிவராமகிருஷ்ணன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
புதுச்சேரி:
புதுவையை அடுத்த பூரணாங்குப்பம் ஜோதி சிலம் பம் சத்ரிய குருகுலம், சத்ரிய சேனா சங்கம் சார்பில் சத்ரியர் மற்றும் சத்திரியாஸ் எனும் கர்லாகட்டை மூலம் மெய்பாடம் பயிற்சி அளிக்கப்பட்டது. இதில் பயிற்சி பெற்றவர்களுக்கு பட்டமளிப்பு மற்றும் சத்திரிய சேவா சங்க தொடக்க விழா குரு குலத்தில் நடைபெற்றது.
நிறுவன தலைவர் ஜோதி செந்தில்கண்ணன் வரவேற்றார். வாசியோகி அருணோதையன், கருணாகரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். தமிழக பா.ஜனதா பிரமுகர் கல்யாணராமன், ஆர்.எஸ்.எஸ். நிர்வாகி ராஜாஜி ஆகியோர் சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்டு குத்துவிளக்கு ஏற்றி தொடங்கி வைத்தனர்.
விழாவில், கடந்த 7 ஆண்டுகளாக நே ரடியாகவும், ஆன்லைன் மூலமாகவும் பயிற்சி பெற்றவர்களுக்கு பட்டம் வழங்கப்பட்டது. இதில் புதுவை, தமிழ்நாடு, கர்நாடகா, டெல்லி, கே ரளா, பீகார் ஆகிய மாநிலங்களை சேர்ந்த 50-க்கும்மேற்பட்டவர்கள் பட்டம் பெற்றனர்.
விழாவில் சமூக ஆர்வலர் ஆனந்தன், தேசிய தொழிற்சங்க தலைவர் கந்தசாமி, சேவா சங்க துணை தலைவர்கள் பயில்வான் பெரியசாமி, முருகன், இணை செயலாளர் திருவேங்கடம், பொருளாளர் சிவராமகிருஷ்ணன் மற்றும் பலர் கலந்து கொண்டனர். முடிவில் சேவாசங்க செ யலாளர் வெற்றிச் செல்வன் நன்றி கூறினார்.