என் மலர்
புதுச்சேரி
புதிய கட்டிடம் திறப்பு விழா
- செல்வகணபதி எம்.பி. திறந்து வைத்தார்
- மனநல மருத்துவர் பாலன் பொன்மணி ஸ்டீபன் அலமேலு சிறப்பு அறையையும் திறந்து வைத்தனர்.
புதுச்சேரி:
புதுவை அரியாங் குப்பத்தை அடுத்த மணவெளி திலகர் வீதியில் அரிச்சுவடி மனநல மையம் இயங்கி வருகிறது.
இந்த மனநல மையத்துக்கு புதிதாக கட்டிடம் கட்டப்பட்டுள்ளது. இதன் திறப்பு விழா நடந்தது. விழாவில் செல்வகணபதி எம்.பி. கலந்து கொண்டு குத்து விளக்கேற்றி புதிய கட்டிடத்தின் கல்வெட்டை திறந்து வைத்தார். சபா நாயகர் ஏம்பலம் செல்வம், அரிச்சுவடி மனநல மையத்தில் மேலாண்மை இயக்குனரின் அறையை திறந்து வைத்தார்.
முன்னாள் எம்.பி. பேராசி ரியர் ராமதாஸ் மருத்துவர் அறையையும், முன்னாள் அமைச்சர் பன்னீர்செல்வம் அலமேலு பெண்கள் சிறப்பு கவுன்சிலிங் அறையை திறந்து வைத்தார்.
மேலும் புதுவை பொது சுகாதார இணை இயக்குனர் முரளி, சமூக நல அறையையும், மனநல மருத்துவர் பாலன் பொன்மணி ஸ்டீபன் அலமேலு சிறப்பு அறையையும் திறந்து வைத்தனர்.
தொடர்ந்து மனநல மருத்துவர் அன்புதுரை, மருந்தியல் நிபுணர் அசோகன், பொதுநல மருத்துவர் அரவிந்தன் ஆகியோர் மையத்தின் சிறப்பு அறைகளை திறந்து வைத்தனர்.
இந்நிகழ்ச்சியில் மனநல மருத்துவர் சத்தியமூர்த்தி, மருத்துவர் நவசக்தி, கட்டிட வடிவமைப்பளார் குபேந்திரன், என்ஜினீயர் இளங்கோ, தணிகாசலம், ரோட்டரி கிளப் ஆப் பாண்டிச்சேரி பிரெஞ்சி சிட்டி தலைவர் சதீஷ்குமார், பொருளாளர் சரவணன் மற்றும் சாதிக், தேவராஜ், ரவிச்சந்திரன், செந்தில், உதயகுமார், ராம்பிரகாஷ், ஜஸ்டின், ஏழுமலை வாசன், ராமச்சந்திரன் மற்றும் ஊர் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்ட சிறப்பு விருந்தினர்களுக்கு மைய இயக்குனர் டாக்டர் இளவழகன் சால்வை அணிவித்தும், பழக்கூடை, நினைவு பரிசு மற்றும் துளசி செடி வழங்கினார்.
முன்னதாக ஆத்திசூடி சிறப்பு பள்ளி தாளாளர் டாக்டர் சத்தியவண்ணன் அனைவரையும் வரவேற்றார். அரிச்சுவடி ஹெல்த் டிரஸ்டி அரசமாதேவி ரவிச்சந்திரன் நன்றி கூறினார்.
இந்நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை அரிச்சுவடி மற்றும் ஆத்திசூடி ஊழியர்கள் சிறப்பாக செய்திருந்தனர்.