என் மலர்
புதுச்சேரி
உப்பனாறு வாய்க்கால் தூர்வாரும் பணி தீவிரம்
- கென்னடி எம்.எல்.ஏ. நடவடிக்கை
- கொசு உற்பத்தியை கட்டுப்படுத்தி நோய் பரவுவதை தடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் தொகுதி எம்.எல்.ஏ.வான கென்னடியிடம் கோரிக்கை வைத்தனர்.
புதுச்சேரி:
உப்ப ளம் தொகுதியில் உள்ள உப்பனாறு வாய்க்காலில் கழிவுநீர் தேங்கி நிற்பதால் கொசு உற்பத்தி அதிகரித்து மலேரியா, டெங்கு, சிக்கன் குனிய தொற்று நோய்கள் உள்ளிட்ட பல் பரவும் அபாயம் இருந்து வந்தது. எனவே கொசு உற்பத்தியை கட்டுப்படுத்தி நோய் பரவுவதை தடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் தொகுதி எம்.எல்.ஏ.வான கென்னடியிடம் கோரிக்கை வைத்தனர்.
அதனடிப்படையில் கென்னடி எம்.எல்.ஏ. அறிவுறுத்தலின் படி புதுவை சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறையின் கீழ் இயங்கும் தேசிய கொசு மற்றும் பூச்சிகளால் பரவும் நோய் தடுப்பு திட்டம் மூலம் டெங்கு காய்ச்சல் பரவலை தடுக்க சுகாதா ரத்துறை சார்பில் நடவடிக்கை எடுக்கப்பட்டது.
இதனிடையே தொகுதி முழுவதும் நகராட்சி சார்பில் கொசு மருந்து தெளிக்கப்பட்டது. இந்நிலை யில் இதனை தொடர்ந்து உப்பனாறு வாய்க்காலை பொதுப்பணித்துறை சார்பில் பொக் லைன் இயந்திரம் மூலம் தூர்வாரும் பணி தொடங்கியது.
இதனை தொகுதி எம்.எல்.ஏ. அனிபால் கென்னடி தொடங்கி வைத்து பார்வையிட்டார். அப்போது பொதுப்பணித் துறை செயற்பொறியார் ராதாகிருஷ்ணன், உதவிப் பொறியார் சம்மந்தம் உள்ளிட்டோர் இருந்தனர்.