என் மலர்
புதுச்சேரி
சாரதா கங்காதரன் கல்லூரியில் பன்னாட்டு கருத்தரங்கு
- புதுவை பல்கலைக்கழக கணினி துறை இணைபேராசிரியர் சுஜாதா தகவல்களை பெறுவது எப்படி என்பதை எடுத்துக்காட்டுகளுடன் விளக்கினார்.
- கருத்தரங்கில் இதயா மகளிர் கல்லூரி, பாரதிதாசன் மகளிர் கல்லூரிகளை சேர்ந்த 70 மாணவிகள் கலந்துகொண்டனர்.
புதுச்சேரி:
புதுவை சாரதா கங்காதரன் கல்லூரியின் தகவல் தொழில் நுட்பத்துறை சார்பில் செயற்கை நுண்ணறிவு மற்றும் தரவு செயலாக்கத்தில் வளர்ந்துவரும் போக்குகள் என்ற தலைப்பில் பன்னாட்டு கருத்தரங்கு நடந்தது. கருத்தரங்கை கல்லூரி துணைத்தலைவர் பழனிராஜா தொடங்கிவைத்தார். கல்லூரி முதல்வர் உதயசூரியன் செயற்கை நுண்ணறிவின் முக்கியத்துவம் குறித்து எடுத்துரைத்தார்.
கருத்தரங்கில் 2 தொழில்நுட்ப அமர்வுகள் நடத்தப்பட்டன. உதவி பேராசிரியை அமுதா சிறப்பு விருந்தினரை அறிமுகப்படுத்தினார். மலேசியா செஜி பல்கலைக்கழகத்தின் தகவல் தொடர்பு பாதுகாப்பு ஆராய்ச்சி மையத்தின் தலைவர் ராஜ்மோகன் செயற்கை நுண்ணறிவின் இன்றியமையாததன்மை குறித்து செயல்விளக்கங்களுடன் தெளிவுபடுத்தினார். புதுவை பல்கலைக்கழக கணினி துறை இணைபேராசிரியர் சுஜாதா தகவல்களை பெறுவது எப்படி என்பதை எடுத்துக்காட்டுகளுடன் விளக்கினார்.
கருத்தரங்கில் இதயா மகளிர் கல்லூரி, பாரதிதாசன் மகளிர் கல்லூரிகளை சேர்ந்த 70 மாணவிகள் கலந்துகொண்டனர்.
அவர்களில் 15 பேர் பல்வேறு தலைப்புகளில் கட்டுரைகளை சமர்ப்பித்தனர். இதில் இதயா மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் இறுதி ஆண்டு பி.சி.ஏ. மாணவி மோனிகா முதல் பரிசையும், பாரதிதாசன் மகளிர் கல்லுரி பி.எஸ்சி. இறுதி ஆண்டு மாணவி மோக்ஷா 2-வது பரிசையும் பெற்றனர்.