என் மலர்![tooltip icon](/images/info-tooltip.svg)
புதுச்சேரி
![ஜூனியர் வாலிபால் போட்டி ஜூனியர் வாலிபால் போட்டி](https://media.maalaimalar.com/h-upload/2023/02/28/1842410-img-20230227-wa0176.webp)
வாலிபால் போட்டியில் வெற்றி பெற்ற அணிகளுக்கு செல்வகணபதி எம்.பி., கென்னடி எம்.எல்.ஏ. ஆகியோர் பரிசு கோப்பை வழங்கிய காட்சி.
ஜூனியர் வாலிபால் போட்டி
![மாலை மலர் மாலை மலர்](/images/authorplaceholder.jpg?type=1&v=2)
- புதுவை வாலிபால் சங்கத்தின் சார்பில் ஆடவர்-பெண்களுக்கான ஜூனியர் வாலிபால் போட்டி நடைபெற்றது.
- ஒலிம்பிக் சங்கம் தனசேகர், வாலிபால் சங்கம் முருகையன், சுந்தர்ராசு, சுகுமாறன், வேணுகோபால், உட்பட பலர் கலந்து கொண்டனர்.
புதுச்சேரி:
புதுவை வாலிபால் சங்கத்தின் சார்பில் ஆடவர்-பெண்களுக்கான ஜூனியர் வாலிபால் போட்டி உப்பளம் இந்திரா காந்தி விளையாட்டு மைதானம் உள்விளையாட்டு அரங்கில் நடைபெற்றது.
இப்போட்டியில் 29 ஆண்கள் அணியும், 12 பெண்கள் அணியும் பங்கேற்றனர். ஆண்கள் பிரிவில் முத்தியால் பேட்டை ஜாலி பிரதர்ஸ் கிளப் அணி முதலிடமும், குனிச்சம்பட்டு ஜூப்பிடர் அணி 2-ம் இடமும், பெண்கள் பிரிவில் கருவடிக்குப்பம் ஸ்பைடர் ஸ்போஸ் முதலிடமும், முத்தியால்பேட்டை சூதுமத் கிளப் அணி 2-ம் இடமும், பெற்றனர்.
வெற்றி பெற்ற அணிகளுக்கு செல்வ கணபதி எம்.பி., கென்னடி எம்.எல்.ஏ. பரிசு கோப்பை வழங்கினர். நிகழ்ச்சியில் புதுவை ஒலிம்பிக் சங்கம் தனசேகர், வாலிபால் சங்கம் முருகையன், சுந்தர்ராசு, சுகுமாறன், வேணுகோபால், உட்பட பலர் கலந்து கொண்டனர்.
இதற்கான ஏற்பாடுகளை புதுவை வாலிபால் சங்க செயலாளர் ராமதாஸ் செய்திருந்தார்.