search icon
என் மலர்tooltip icon

    புதுச்சேரி

    உப்பனாறு தூர் வாரும் பணியை கென்னடி எம்.எல்.ஏ. ஆய்வு
    X

    உப்பனாறு தூர் வாரும் பணியை கென்னடி எம்.எல்.ஏ. ஆய்வு செய்த போது எடுத்த படம்.

    உப்பனாறு தூர் வாரும் பணியை கென்னடி எம்.எல்.ஏ. ஆய்வு

    • நேத்தாஜி நகர் பகுதியில் பன்றிகள் தொல்லையை கட்டுப்படுத்த வேண்டும் எனவும் அவர் அறிவுறுத்தினார்.
    • அரிகிருஷ்ணன், சந்திரன், காளப்பன், செல்வம், கோபி, ரவி, ராக்கேஷ், அருள் ஆகியோர் உடன் இருந்தனர்.

    புதுச்சேரி:

    புதுவையில் தொடரும் மழையையொட்டி உப்பளம் தொகுதியில் நோய் பரவாமல் தடுக்க நகராட்சி சுகாதாரத்துறை அதிகாரி டாக்டர் பிரீதாவை கென்னடி எம்.எல்.ஏ. சந்தித்து தொகுதி முழுவதும் கொசு மருந்து அடிக்கும் பணியை தீவிரப்படுத்த வேண்டும் என கேட்டு கொண்டார்.

    மேலும் நேத்தாஜி நகர் பகுதியில் பன்றிகள் தொல்லையை கட்டுப்படுத்த வேண்டும் எனவும் அவர் அறிவுறுத்தினார். தொடர்ந்து வாணரப் பேட்டை பகுதியில் உப்பனாறு தூர்வாரும் பணியை கென்னடி

    எம்.எல்.ஏ. பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    அப்போது பொதுப் பணித்துறை அதிகாரிகளிடம் தூர் வாரும் பணியை தீவிரப்படுத்த வேண்டும் என கேட்டு கொண்டார்.

    இந்நிகழ்ச்சியின் போது தி.மு.க. நிர்வாகிகள் சக்தி வேல், அரிகிருஷ்ணன், சந்திரன், காளப்பன், செல்வம், கோபி, ரவி, ராக்கேஷ், அருள் ஆகியோர் உடன் இருந்தனர்.

    Next Story
    ×