என் மலர்
புதுச்சேரி

கோப்பு படம்.
ராட்சத அலையில் சிக்கி லாரி டிரைவர் பலி

- புதுவை கடலில் குளித்த போது ராட்சத அலையில் சிக்கி லாரி டிரைவர் பலியானார்.
- அவரை அலை இழுத்து சென்றதால் இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த மற்ற டிரைவர்கள் அலறல் சத்தம் போட்டனர்.
புதுச்சேரி:
புதுவை கடலில் குளித்த போது ராட்சத அலையில் சிக்கி லாரி டிரைவர் பலியானார்.
மகாராஷ்டிரா மாநிலம் தகாரி பகுதியை சேர்நதவர் பாலாஜி பகோரா(வயது47). இவர் கண்டெய்னர் லாரி டிரைவராக வேலை செய்து வந்தார். மகாராஷ்டிராவில் இருந்து பொருட்களை கண்டெய்னர் லாரியல் ஏற்றி கொண்டு நேற்று காலை திருபுவனையில உள்ள ஒரு தனியார் தொழிற்சாலைக்கு கொண்டு வந்தார்.
அப்போது பொருட்கள் இறக்க காலதாமதம் ஏற்பட்டதால் அங்கிருந்த மற்ற 3 டிரைவர்களுடன் பாலாஜி பகோரா பொழுது போக்கிற்காக புதுவை கடற்கரைக்கு வந்தனர்.
காந்தி சிலை பின்புறம் 4 பேரும் கடலில் இறங்கி உற்சாகமாக குளித்தனர். அப்போது எழுந்த ராட்சத அலையில் பாலாஜி பகோரா சிக்கிக்கொண்டார். அவரை அலை இழுத்து சென்றதால் இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த மற்ற டிரைவர்கள் அலறல் சத்தம் போட்டனர்.
உடனே அங்கிருந்தவர்கள் கடலில் இறங்கி பாலாஜி பகோராவை மீட்டனர். பின்னர் அவரை மற்ற டிரைவர்கள் புதுவை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதித்த டாக்டர்கள் ஏற்கனவே பாலாஜி பகோரா இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
இதுகுறித்த புகாரின் பேரில் பெரியக்கடை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். கடலில் மூழ்கி பலியான பாலாஜி பகோராவுக்கு திருமணமாகி மனைவி மற்றும் 2 குழந்தைகள் உள்ளனர் என்பது குறிபிடத்தக்கது.