என் மலர்![tooltip icon](/images/info-tooltip.svg)
புதுச்சேரி
![மருத்துவ கருவிகள் பயிற்சி பட்டறை மருத்துவ கருவிகள் பயிற்சி பட்டறை](https://media.maalaimalar.com/h-upload/2023/11/30/1988947-manakulam.webp)
பயிற்சி பட்டறையில் பங்கேற்ற மாணவ-மாணவிகளுக்கு சான்றிதழ் வழங்கப்பட்ட காட்சி.
மருத்துவ கருவிகள் பயிற்சி பட்டறை
![மாலை மலர் மாலை மலர்](/images/authorplaceholder.jpg?type=1&v=2)
- மணக்குள விநாயகர் என்ஜினீயரிங் கல்லூரி இயக்குனரும் முதல்வருமான வெங்க டாசலபதி பயிற்சி பட்டறை குறித்து விளக்கினார்.
- பட்டறையில் பங்கேற்ற அனைத்து மாணவர்களுக்கும் சான்றிதழ் வழங்கப்பட்டது.
புதுச்சேரி:
புதுவை, மதகடிப்பட்டு மணக்குள விநாயகர் என்ஜினீயரிங் கல்லூரியில் உயிர் மருத்துவத்துறை பயோ மெடிக்கல் சொசைட்டி சார்பில் 3-ம் ஆண்டு மாணவர்களுக்கு மருத்துவ கருவிகள் பயிற்சிப் பட்டறை நடந்தது.
இதனை அதீனா பாண்டியன் பயோ மெடிக்கல் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனம் நடத்தியது.
இதில் தக்ஷஷீலா பல்கலைக்கழக வேந்தரும், மணக்குள விநாயகர் கல்வி அறக்கட்டளையின் தலைவரும், மேலாண் இயக்குனருமான தன சேகரன், துணை தலைவர் சுகுமாறன், செயலாளர் நாராயணசாமி. பொரு ளாளர் ராஜராஜன் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர். மணக்குள விநாயகர் என்ஜினீயரிங் கல்லூரி இயக்குனரும் முதல்வருமான வெங்க டாசலபதி பயிற்சி பட்டறை குறித்து விளக்கினார்.
உயிர் மருத்துவப் என்ஜினீயரிங் துறை தலைவர் விஜயலட்சுமி சிறப்புரை ஆற்றினார். பயிற்சியில் அதீனாபாண் டியன் மற்றும் பயிற்சியாளர்கள் பங்கேற்று உயிர் மருத்துவப் பொறியியல் சார்ந்த பல்வேறு உபகரணங்கள் மற்றும் கருவிகள் பற்றியும், அவற்றின் பயன்கள், பழுது நீக்குதல் பற்றியும் செயல் விளக்கம் அளித்தனர்.
இப்பயிற்சி பட்டறையில் பங்கேற்ற அனைத்து மாணவர்களுக்கும் சான்றிதழ் வழங்கப்பட்டது. அகாடமிக் டீன் அறிவழகர் நன்றி கூறினார்.