என் மலர்
புதுச்சேரி

கோப்பு படம்.
அரசின் திட்டங்களை பார்த்து நாராயணசாமி புலம்புகிறார்

- புதுவையில் இரட்டை என்ஜின் ஆட்சி சிறப்பாக செயல்படுகிறது.
- எதிர்பார்ப்புகளை ஒன்றன்பின் ஒன்றாக இந்த அரசு நிறைவேற்றி வருகிறது.
புதுச்சேரி:
புதுவை கம்பன் கலையரங்கில் நடந்த 4 அரசு திட்ட தொடக்க விழாவில் அமைச்சர் நமச்சிவாயம் பேசியதாவது:-
புதுவையில் இரட்டை என்ஜின் ஆட்சி சிறப்பாக செயல்படுகிறது. மக்கள் எந்த எதிர்பார்ப்போடு கூட்டணிக்கு வாக்களித்தார்களோ, அந்த எதிர்பார்ப்புகளை ஒன்றன்பின் ஒன்றாக இந்த அரசு நிறைவேற்றி வருகிறது.
மக்களுக்கான திட்டங்களை செயல்படுத்த கவர்னர், முதல்-அமைச்சர் துணையாக இருக்கின்றனர். புதுவையில் இன்று எல்லா திட்டங்களையும் நிறைவேற்றுகிறார்களே? என வயிற்றெரிச்சலில் எதிர்கட்சிகள் புலம்புகின்றன. குறிப்பாக முன்னாள் முதல்-அமைச்சர் நாராயணசாமி, காங்கிரஸ் தலைவர் வைத்திலிங்கம் ஆகியோர் இந்த அரசை விமர்சிப்பதில் குறியாக உள்ளனர். இதைப்பற்றி முதல்-அமைச்சர் கவலைப் படவில்லை. மக்களுக்கு இந்த அரசை பற்றி தெரியும். நாங்கள் என்ன செய்வோம் என தெரியும்.
இது மக்களால் உருவாக்க ப்பட்ட அரசு. இதனால் அமைச்சர்கள், எம்.எல்.ஏக்கள் மக்களுக்காகவும், புதுவை வளர்ச்சிக்காகவும் இரவு, பகல் பாராமல் பாடுபட்டு வருகின்றனர். எதிர்காலத்திலும் இந்த அரசு மக்களுக்காக பாடுபடும். இத்திட்டங்கள் மக்கள் கையில் சேரும்போது பொருளாதாரம் நிச்சயமாக உயர்ந்திருக்கும்.
இவ்வாறு அவர் பேசினார்.